நலம் தரும் நர்சிங்! | Kalvimalar - News

நலம் தரும் நர்சிங்!செப்டம்பர் 19,2023,16:51 IST

எழுத்தின் அளவு :

அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் சேவை செய்யும் 'செவிலியர்கள்’ ஒட்டுமொத்த மருத்துவத் துறையின் முதுகெலும்பு என்று சொல்லலாம். சாதாரண சிகிச்சையில் மட்டுமின்றி, அறுவை சிகிச்சையிலும் நோயளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் பெரிதும் உறுதுணையாக உள்ளனர்.



துறையின் வளர்ச்சி 


சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 2029 வரையான ஆண்டுகளில் நர்சிங் துறையில் வேலை வாய்ப்பு 7 சதவீதம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, தோராயமாக 2 லட்சத்து 22 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் 2020ம் ஆண்டில் 28,545.73 மில்லியன் டாலராக இருந்த சுகாதார பணியாளர்கள் சந்தை, 2025ம் ஆண்டில் 38,879.13 மில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



படிப்பு நிலைகள்: 


டிப்ளமா, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளாக வழங்கப்படுகின்றன. பிஎச்.டி, படிக்கும் வாய்ப்பும் உண்டு. இந்தியாவில் பெறப்பட்ட நர்சிங் பட்டம், பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 



தகுதிகள்:


இளநிலை பட்டப்படிப்பில் சேர, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றை முக்கிய பாடங்களாக கொண்டு, குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதுநிலை பட்டப்படிப்பில் சேரலாம். மெடிக்கல் மைக்ரோபயாலஜி மற்றும் மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரி, கிளினிக்கல் ரிசர்ச், நியூட்ரிஷன் மற்றும் டயடிக்ஸ், அனாடமி, உளவியல், நோயியல் மற்றும் மரபியல் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன.



கல்லூரிகள்:


பல்வேறு அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நர்சிங் படிப்பு வழங்கப்படுகின்றன. அரசு கல்வி நிறுவனங்களில் மிக மிக குறைந்த அளவிலான கல்விக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.



பதிவு: செவிலியர்களாக பணியாற்றுவதற்கு, படிப்பை நிறைவு செய்ததும் அரசு அங்கீகாரம் பெறும் வகையில் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயம். பதிவு சான்றிதழ் இருந்தால் மட்டுமே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பணிபுரிய முடியும்.



வேலை வாய்ப்பு பதவிகள்


பதிவு செய்யப்பட்ட செவிலியர், கார்டியாக் செவிலியர், சி.ஆர்.என்.ஏ., - சான்றளிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட செவிலியர் மயக்க மருந்து நிபுணர், சி.என்.எஸ்.,-மருத்துவ செவிலியர் நிபுணர்,


கிரிட்டிகல் கேர் நர்ஸ், குடும்ப செவிலியர் பயிற்சியாளர், முதியோர் நர்சிங், பெரிய அறுவை சிகிச்சை செவிலியர், மனநல செவிலியர், செவிலியர் கல்வியாளர், செவிலியர் மேலாளர், நர்ஸ் மிட்வைப், நர்சிங் நிர்வாகி, புற்றுநோயியல் செவிலியர், எலும்பியல் செவிலியர், குழந்தை மருத்துவ செவிலியர், பொது சுகாதார செவிலியர், பயண செவிலியர் போன்ற பொறுப்புகளில் வேலை வாய்ப்பு பெறலாம்.



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us