டிசைன் படிப்பில் சேர யு.சி.இ.இ.டி., எழுதுங்கள் | Kalvimalar - News

டிசைன் படிப்பில் சேர யு.சி.இ.இ.டி., எழுதுங்கள்அக்டோபர் 21,2023,15:16 IST

எழுத்தின் அளவு :

தேசிய அளவிலான, சிறந்த மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை டிசைன் படிப்பில், சேர்க்கை பெறுவதற்கு எழுத வேண்டிய பொது நுழைவுத்தேர்வு யு.சி.இ.இ.டி.,


படிப்பு: பேச்சுலர் ஆப் டிசைன் - பி.டெஸ்.,


கல்வி நிறுவனங்கள்: ஐ.ஐ.டி.,-மும்பை, ஐ.ஐ.டி.,-டெல்லி, ஐ.ஐ.டி.,-கவுஹாத்தி, ஐ.ஐ.டி., - ஹைதராபாத் மற்றும் ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., இவை தவிர ஏராளமான கல்வி நிறுவனங்கள் யு.சி.இ.இ.டி., மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.


கல்வித் தகுதி: 2023ம் ஆண்டில் 12ம் வகுப்பு நிறைவு செய்த மாணவர்கள் அல்லது 2024ல் நடைபெறும் 12ம் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், வணிகவியல், கலை ஆகிய பிரிவு மாணவர்கள் பொது நுழைவுத்தேர்வை எழுதலாம்.


வயது வரம்பு: அக்டோபர் 1, 1999 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்கள் அக்டோபர் 1, 1994 அன்று அல்லது அதற்கு பிறகு பிறந்தவராக இருக்கலாம்.  


தேர்வு முறை: மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் 2 பிரிவுகள் இடம் பெறும். ஆங்கிலத்தில் மட்டும் கேள்விகள் கேட்கப்படும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட வேண்டும்.


தேர்வு நேரம்: மூன்று மணிநேரம்


குறிப்பு: ஒரு மாணவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இத்தேர்வை எழுத முடியும். வெளிநாட்டுவாழ் இந்தியர், வெளிநாட்டினரும் இத்தேர்வை எழுதலாம். 


விண்ணப்பிக்கும் முறை: www.uceed.iitb.ac.in/2024/registration.html எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 


விபரங்களுக்கு: www.uceed.iitb.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us