சி.எஸ்.ஐ.ஆர்.-யு.ஜி.சி., நெட் தேர்வு | Kalvimalar - News

சி.எஸ்.ஐ.ஆர்.-யு.ஜி.சி., நெட் தேர்வுநவம்பர் 13,2023,12:04 IST

எழுத்தின் அளவு :

பல்கலைக்கழக மானியக் குழுவின் சார்பாக, ஜாயிண்ட் சி.எஸ்.ஐ.ஆர்.-யு.ஜி.சி., நெட் தேர்வை என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.



முக்கியத்துவம்


இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் இளம் ஆராய்ச்சி உதவித்தொகை - ஜே.ஆர்.எப்., பெறுவதோடு மட்டுமல்லாமல், இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் ஆக பணிபுரியும் தகுதியையும் பெறுகின்றனர்.



தேர்வு தாள்கள்:


கெமிக்கல் சயின்சஸ்


எர்த், அட்மாஸ்பெரிக், ஓசன் மற்றும் பிளானெடரி சயின்சஸ்


லைப் சயின்சஸ்


மேத்மெடிக்கல் சயின்சஸ் 


பிசிக்கல் சயின்சஸ்


ஆகிய பாடங்களில் நடைபெறும் இத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெறும். அப்ஜெக்டிவ் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.



தேர்வு நேரம்: 180 நிமிடங்கள்



தேர்வு நடைபெறும் முறை: முற்றிலும் கம்ப்யூட்டர் வாயிலாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.



வயதுவரம்பு: ஜே.ஆர்.எப்., உதவித்தொகை பெற, 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. இதர பிறபடுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.



உதவி பேராசிரியர் தகுதியை மட்டுமே எதிர்நோக்குபவர்களுக்கு எந்த உச்ச வயதுவரம்பும் இல்லை.



விண்ணப்பிக்கும் முறை: https://csirnet.ntaonline.in/ எனும் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.



விபரங்களுக்கு: www.nta.ac.in மற்றும் https://csirnet.nta.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us