புட்வேர் இன்ஸ்டிடியூட் | Kalvimalar - News

புட்வேர் இன்ஸ்டிடியூட்டிசம்பர் 13,2023,10:07 IST

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ், கடந்த 1986ல் நிறுவப்பட்ட புட்வேர் டிசைன் அண்டு டெவெலப்மெண்ட் இன்ஸ்டிடியுட், ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம்.




முக்கியத்துவம்


காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்குவதோடு, பேஷன் டிசைன், சில்லறை விற்பனை, பேஷன் பொருட்கள், தோல் பொருட்கள் பிரிவுகளில் தேவையான திறனாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இக்கல்வி நிறுவனம் செயல்படுகிறது. மேலும், குறுகிய கால தொழில்துறை சார்ந்த பயிற்சி மற்றும் திட்டங்களை வழங்குகிறது.



கல்வி நிறுவன வளாகங்கள்: நொய்டா, கொல்கத்தா, ரோடக், ரேபரேலி, சென்னை, சிந்த்வாரா, சண்டிகர், குனா, அங்கலேஷ்வர், ஹைதராபாத், பாட்னா



வழங்கப்படும் படிப்புகள்:



இளநிலை பட்டப்படிப்புகள்:


பி.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன்


பி.டெஸ்., - பேஷன் டிசைன்


பி.டெஸ்., - லெதர், லைப்ஸ்டைல் அண்டு புரொடெக்ட் டிசைன்


பி.பி.ஏ., - ரீடெயில் அண்டு பேஷன் மெர்ச்சன்டைஸ்



முதுநிலை பட்டப்படிப்புகள்:


எம்.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன்


எம்.டெஸ்., - பேஷன் டிசைன்


எம்.பி.ஏ., - ரீடெயில் அண்டு பேஷன் மெர்ச்சன்டைஸ்



தேர்வு முறை: இப்படிப்புகளில் சேர்க்கை பெற 2024ம் ஆண்டிற்கான ஏ.ஐ.எஸ்.டி., எனும் ’ஆல் இந்தியா செலக்‌ஷன் டெஸ்ட்’ எழுத வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக நடத்தப்படும் இத்தேர்வு தலா 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத https://fddiadmissions.qualcampus.com/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.



விபரங்களுக்கு: www.fddiindia.com



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us