ஆன்லைனில் இலவச படிப்புகள் | Kalvimalar - News

ஆன்லைனில் இலவச படிப்புகள்டிசம்பர் 16,2023,14:38 IST

எழுத்தின் அளவு :

யு.கே.,வின் கல்வி வாய்ப்புகள் மற்றும் கலாசார நல்லுறவுகளுக்கான சர்வதேச அமைப்பான பிரிட்டிஷ் கவுன்சில், இலவச குறுகியகால படிப்புகளை ஆன்லைன் வாயிலாக வழங்குகிறது.



அறிமுகம்


கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகம் முழுதிலும் 10 கோடி பேருக்கு ஆங்கில மொழியை கற்பித்த பிரிட்டிஷ் கவுன்சில், பிரிட்டிஷ் மியூசியம் பிரிட்டிஷ் லைப்ரரி மற்றும் 23 முன்னணி பல்கலைக்கழகங்களின் ஒருங்கிணைப்பில் இந்த ஆன்லைன் கற்றல் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.



இதன் வாயிலாக, இங்கிலாந்து உயர்கல்வி அனுபவம், புதிய திறன்களை வளர்த்தல், பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்குதல், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்து பரிமாற்றம் ஆகியவை நிகழ்த்தப்படுகின்றன.



படிப்புகள்:


கல்வியில் பாலின சமத்துவம், உள்ளடக்கிய கல்விமுறைகள், கல்வியில் தலைமைப்பண்பு, வேலைவாய்ப்பு திறன்கள், யு.கே.,வில் உயர்கல்விக்கு தயாராதல், மேம்பட்ட தொல்லியில் ரிமோட் சென்சிங் உட்பட பல்வேறு தலைப்புகளில் குறுகியகால பயிற்சி அளிக்கப்படுகிறது. இவைதவிர, இயற்பியல், உளவியல், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, சூழலியல், சந்தைப்படுத்தல் போன்ற துறை சார்ந்த படிப்புகளும் பல்வேறு முன்னணி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்றன. 



பயிற்று மொழி: அனைத்து படிப்புகளும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகின்றன. 



பயிற்சி நேரம்: பெரும்பாலான படிப்புகள் ஆறு முதல் பத்து வாரங்கள் வரை வழங்கப்படுகின்றன. வாரத்திற்கு 2-4 மணிநேர பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கும் சில குறுகிய படிப்புகளும் உள்ளன. படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, முறையான தேர்வுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. ஆனால், மாணவர்கள் கல்வி கற்றதற்கு உரிய ஆவணம் வழங்கப்படுகிறது.



தகுதிகள்: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். எனினும், அனைத்து படிப்புகளும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுவதால் ஆங்கில அறிவு அவசியம்.



விபரங்களுக்கு: www.futurelearn.com/partners/british-council



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us