அதிகரிக்கும் நீட், ஜே.இ.இ., விழிப்புணர்வு! | Kalvimalar - News

அதிகரிக்கும் நீட், ஜே.இ.இ., விழிப்புணர்வு!பிப்ரவரி 24,2024,09:24 IST

எழுத்தின் அளவு :

மருத்துவ படிப்புகளில் சேர்க்கை பெற அவசியம் எழுத வேண்டிய நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற எழுத வேண்டிய ஜே.இ.இ., தேர்வு குறித்த விழிப்புணர்வு, தமிழக பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கணிசமாக அதிகரித்து வருகிறது. 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தாண்டு நீட் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மாணவ, மாணவிகள் 11ம் வகுப்பு படிக்கும் போதே இத்தகைய தேர்வுகளுக்கு தயாராகின்றனர். சிறு நகரங்களில் விழிப்புணர்வு சற்று குறைவாகவே உள்ளது. 


ஆகையால், பெரும்பாலானோர் 12ம் வகுப்பு நிறைவு செய்த பிறகே, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தயாராகின்றனர். அவர்கள், முன்பே இத்தகைய தேர்வுகளுக்கு பயிற்சி பெறும்பட்சத்தில் ஒரு சில ஆண்டுகளை தயாராவதற்காக மட்டுமே செலவிட வேண்டிய நிலை இருக்காது. அதுமட்டுமின்றி, 11ம் வகுப்பிலேயே அவர்கள் பயிற்சி பெறும்பட்சத்தில் தேர்வை அணுவதும் எளிதானதாக இருக்கும்.


மென்டார்ஷிப்


நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் 35 ஆண்டுகால அனுபவம் பெற்ற எங்கள் நிறுவனத்தில், தற்போது பயிற்சி பெறும் சில மாணவர்களது பெற்றோரும் எங்கள் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மாணவர்களுக்கு ’மென்டார்ஷிப்' முறையை பின்பற்றுவதன் வாயிலாக, ஒவ்வொரு மாணவரது நிலை அறிந்து, அதற்கு ஏற்ப ஆலோசனைகளை வழங்குகிறோம். வகுப்புகள் நிறைவடைந்ததும், ஒவ்வொரு மாணவரிடமும் ஆசிரியர் தனித்தனியாக கலந்துரையாடி, மாணவரது மனநலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கான ஆலோசனைகளை வழங்குவர். வகுப்புகளுக்கு இடையே சில நிமிடங்கள் யோகா, தியானம் ஆகியவற்றை பயிற்சி செய்யவும் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம். இத்தகைய சிறிய முயற்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதை எங்களால் உணரமுடிகிறது.


பயிற்சி முறை


மாணவர்களது வகுப்புகளை பொறுத்து, மாதம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை என தேர்வுகளை நடத்துகிறோம். அத்தகைய தேர்வுகளில் செய்த தவறுகளை மாணவர்கள் அறியச் செய்து மீண்டும் அத்தகைய தவறுகள் நிகழாதவாறு பயிற்சி அளிக்கிறோம். மாநில பாடத்திட்டங்களை பின்பற்றும் மாணவர்களுக்கும் அவர்களது பாடத்திற்கு ஏற்ப பயிற்சி அளிக்கிறோம். வகுப்புகள் நடத்தும் விதம், பாடத்திட்டங்கள், மாணவர்களை அணுகும் விதம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆசிரியர்களுக்கும் தேவையான பயிற்சி அளிக்கிறோம். 


வரும் காலத்தில், அனைத்துவிதமான நுழைவு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக வளம் வர வேண்டும் என்பதே எங்களது குறிக்கொள். மாணவர்கள், அவரவர்களது பாடங்களில் கவனம் செலுத்தி பயிற்சி பெற்றால் போதும், தேர்வுகளில் அவர்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும். 


-சவுரப் திவாரி, ஆலன் கரியர் இன்ஸ்டிடியூட், கோவை.




Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us