பி.எஸ்சி., நர்சிங் படிப்பை இந்தியாவின் முன்னணி மருத்துவக் கழகமான எய்ம்ஸ்-ல் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்கள் தர முடியுமா? | Kalvimalar - News

பி.எஸ்சி., நர்சிங் படிப்பை இந்தியாவின் முன்னணி மருத்துவக் கழகமான எய்ம்ஸ்-ல் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்கள் தர முடியுமா?ஜூன் 17,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவக் கழகம் புதுடில்லியில் உள்ளது என்பதை அறிவீர்கள். இதன் படிப்புகளும் சமீபத்திய சர்ச்சைகளும் பிரபலமானவை. இது நடத்தும் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு மிகவும் தரமானதாகவும் சிறப்பான வேலை வாய்ப்பை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.

பி.எஸ்சி., நர்சிங் 4 ஆண்டு படிப்பாகும். பெண்கள் மட்டுமே படிக்கலாம். பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்தை கட்டாயம் படித்திருக்க வேண்டும். குறைந்தது 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 50% பெற்றிருந்தால் போதும். நுழைவுத் தேர்வு மூலமாகவே சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள்.

திருவனந்தபுரத்திலும், டில்லியிலும் மட்டுமே நுழைவுத்தேர்வு நடத்தப்படகிறது. இது பற்றிய முழு விபரங்களை www.aiims.ac.in, www.aiims.edu ஆகிய இணையதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us