மத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம் | Kalvimalar - News

மத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்

எழுத்தின் அளவு :

மத்திய அரசு 2007-08ஆம் ஆண்டு முதல் உயர்தர கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு “மத்திய  அரசு உயர்தரக் கல்வி திட்டத்தின்” (Central Sector Scholrahsip Sheme of Top-Class Education for Adi-Dravidars /Tribes) கீழ் தமிழ்நாட்டில் பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம் மற்றும் விமான ஓட்டுனர் பயிற்சி போன்ற படிப்புகளை நடத்தும் 6 உயர்தர கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் +2 படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்தர கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்துவது ஆகும்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய கல்விக் கட்டணம், திரும்பப் பெறமுடியாத கட்டணங்கள், புத்தகங்கள் மற்றும் கணினி ஆகியவற்றிற்காக ஏற்படும் செலவுத் தொகையை அந்தந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அளித்து வருகிறது.

 

இக்கல்வி உதவித் தொகை பெற பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகைப்படாமல் இருக்கவேண்டும். 

 

வ.

எண்

கல்வி நிலையம் படிப்புகள் ஆதிதிராவிடர்
மாணவர்கள்
பழங்குடியினர்
மாணவர்கள்
மொத்தம்
1 இந்தியத் தொழில்
நுட்பக் கழகம்
சென்னை
பொறியியல்

10

5

15

2 வேலூர் தொழில் நுட்பக்
கல்லூரி, வேலூர்
பொறியியல்

10

5

15

3 தேசீய தொழில் நுட்பக்
கல்லூரி, திருச்சி
பொறியியல்

10

5

15

4 அரசு மருத்துவக்
கல்லூரி, வேலூர்
மருத்துவம்

10

5

15

5 இந்திய மேலாண்மைக்
கல்லூரி, சென்னை
மேலாண்மை

10

5

15

6 சென்னை வானூர்திக்
கழகம், சென்னை
வானூர்தி இயல்

5

5

10

 

மொத்தம்

55

30

85

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us