எம்.எஸ்.சி., உணவு தொழில்நுட்பம்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு! | Kalvimalar - News

எம்.எஸ்.சி., உணவு தொழில்நுட்பம்: மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

எழுத்தின் அளவு :

மைசூர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 2 ஆண்டுகள் எம்.எஸ்.சி., உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த படிப்பிற்கான பயிற்சி மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது.

தகுதிகள்:

பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் வேதியியல் / பயோகெமிஸ்ட்ரி ஆகியவற்றில் ஒன்றை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது வேளாண்மை / பொறியியல் / டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை 12-ம் வகுப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது இளநிலை பட்டப்படிப்பிலாவது கண்டிப்பாக படித்திருக்க வேண்டும்.

பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வேளாண்மை, பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை முக்கிய பாடமாக படித்திருப்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி எடுத்திருக்க வேண்டும்.

நுழைவுத் தேர்வு:

மேற்கண்ட தகுதியை பெற்றிருப்பவர்கள் வரும் ஜூலை 20ம் தேதி மைசூர் அல்லது டெல்லியில் நடக்க உள்ள நுழைவுத் தேர்வில் பங்கேற்கலாம்.

இடஒதுக்கீடு: எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர், உடல் இயலாத்தன்மை உள்ளவர்களுக்கு அரசு உத்தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைக்க வேண்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்ற www.cftri.com வெப்சைட்டில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லொட் செய்துகொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ரூ.500 க்கான டி.டி.,யுடன் DIRECTOR, CFTRI, MYSORE - 570 020  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி தேதி ஜூன் 26.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us