பப்ளிக் பாலிசி அண்டு மேனேஜ்மென்ட் | Kalvimalar - News

பப்ளிக் பாலிசி அண்டு மேனேஜ்மென்ட்

எழுத்தின் அளவு :

பப்ளிக் பாலிசி அண்டு மேனேஜ்மென்ட்டில் முதுகலை படிக்கும் போது கொள்கை வகுப்பது, திட்ட மதிப்பீடு, நிர்வாகம், அரசியல் குறித்து கற்றுத்தரப்படுகிறது. தேசிய அளவில், மாநில அளவில் மட்டுமல்லாமல் உள்ளாட்சி அமைப்புகளில் கூட கொள்கை திட்டமிடலில் இவர்கள் உதவலாம். பொது நிர்வாகம் தொடர்பான படிப்புகளுடன் ஒப்பிடும் போது பப்ளிக் பாலிசி அண்டு மேனேஜ்மென்ட் படித்தால் அரசுத்துறையிலும், தனியார் துறைகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இதற்கு தேவையான அறிவும், திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சுற்றுலா, போக்குவரத்து, நகர திட்டமிடல், பொதுத்துறை, தனியார் துறை கூட்டுறவு, வீட்டு வசதி, சுகாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் இவர்கள் பணியாற்றலாம். அரசின் கொள்கை முடிவுகளை பாதிக்கும் பொருளாதார, சமூக, அரசியல் நிர்பந்தங்கள் குறிந்து இவர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர். கடந்த கால சம்பவங்களை புரிந்து கொண்டு நிகழ்கால தேவைகளுக்கு ஏற்ப புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதே இவர்களது பணி. அரசுத் துறையுடன், தனியார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இடையேயான உறவுகளை மேம்படுத்த உதவுகின்றனர்.

கிராஜூவேட் மேனேஜ்மென்ட், கிராஜூவேட் மேனேஜ்மென்ட் டிரைனி, பாலிசி அண்டு பிளானிங் ஆபிசர், பைனான்ஸ் அண்டு கமர்சியல் மேனேஜர் போன்ற பல வாய்ப்புகள் பாலிசி மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கு உள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாளர்களாகவும், அரசியல் ஆலோசர்களாகவும் இவர்கள் பணியாற்றலாம். பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் பப்ளிக் பாலிசி அண்டு மேனேஜ்மென்ட் முதுகலை படிப்பாக கற்றுத்தரப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us