பயோமெடிக்கல் இன்ஜினியரிங் அண்டு கிளினிக்கல் இன்ஜினியரிங் | Kalvimalar - News

பயோமெடிக்கல் இன்ஜினியரிங் அண்டு கிளினிக்கல் இன்ஜினியரிங்

எழுத்தின் அளவு :

மருத்துவத்துறைக்கு உதவும் புதிய தொழில்நுட்பங்களுக்கு இன்ஜினியரிங்கை பயன்படுத்துவதை பற்றி பயோமெடிக்கல் இன்ஜினியரிங் கற்றுத்தருகிறது. இன்ஜினியரிங்கை பயன்படுத்தி பிரச்னை இல்லாத வடிவமைப்பை மருத்துவ துறைக்கு ஏற்றபடி உருவாக்கி நோயாளியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. புதிய துறையான பயோமெடிக்கல் இன்ஜினியரிங்கில் நவீன ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

பயோஇன்பர்மேட்டிக்ஸ், மெடிக்கல் இமேஜிங், இமேஜ் புராசசிங், பிசியலாஜிக்கல் சிக்னல் புராசசிங், பயோமெக்கானிக்ஸ், பயோமெட்டீரியல்ஸ், பயோஇன்ஜினியரிங், சிஸ்டம் அனாலிசிஸ், திரிடி மாடலிங் போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய துறை இது. எம்.ஆர்.ஐ., இ.இ.ஜி., போன்ற மருத்துவ உபகரணங்கள் மற்றும் குறிப்பிட்ட சில மருந்துகள் தயாரிப்பில் பயோஇன்ஜினியரிங் முக்கிய பங்காற்றுகிறது. ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களை கையாள கற்றுத்தருகிறது கிளினிக்கல் இன்ஜினியரிங்.

இது பயோமெடிக்கல் இன்ஜினியரிங்கின் உட்பிரிவு. மருத்துவ கருவிகள் தொடர்பான பிரச்னைகளில் இவர்கள் தொழில்நுட்ப ஆலோசகர்களாக செயல்படுகின்றனர். பயோமெடிக்கல் இன்ஜினியரிங் வல்லுனர்களை, கிளினிக்கல் இன்ஜினியர்கள் மேற்பார்வையிட்டு பாதுகாப்பை உறுதி செய்கின்றனர். டாக்டர்களுடனும், ஐ.டி., வல்லுனர்களுடனும் இணைந்து பணியாற்று வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு. தமிழகத்தில் 14 சுயநிதிக்கல்லூரிகளில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பு உள்ளது.

பயோமெடிக்கல் இன்ஜினியரிங்கை முதுகலை படிப்பாக கீழக்கண்ட கல்லூரிகளில் வழங்குகின்றன:
கார்டிப் பல்கலைக்கழகம்,
பிரிட்டன் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சிங்கப்பூர்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us