கொஞ்சம் மாற்றி கொள்ளலாமே.. | Kalvimalar - News

கொஞ்சம் மாற்றி கொள்ளலாமே..

எழுத்தின் அளவு :

பள்ளி விடுமுறையில் சில குழந்தைகளை சந்திக்கும் போது, என்ன படிகின்றாய்? எங்கு படிக்கின்றார்? எவ்வளவு மதிப்பெண் பெறுவாய் என்ற பொதுவான கேள்விகளை கேட்கும் போது ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு பதில்கள் சொல்ல சுவாரசியமாக இருந்தது. சில குழந்தைகள் மட்டும் மதிப்பெண் குறைவாகவும், தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியர் சரியில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.

பிள்ளைகள் கூறும் காரணங்கள்:
* பாடங்கள் அனைத்தும் வறண்டதாக இருக்கும் படிக்கவே பிடிக்காது.
* வினாத்தாள் மிகவும் கடினமாக இருக்கும்.
* எங்கள் பள்ளி ஆசிரியர் சரியாக பாடம் கற்பிப்பதில்லை.
* பள்ளி அறை சரியில்லை
* விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் படிக்க விடுவதில்லை.
* தேர்வு நேரத்தில் விருந்தாளிகள் தொல்லை.

இந்த காரணங்களுக்கு பெற்றோர்களும் ஒரு வகையில் ஆதரவு அளிக்கின்றனர். பிள்ளைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் ஆசிரியர்களை  குறை கூறுகின்றனர். அந்த பள்ளியில் ஆசிரியர்கள் சரியில்லை, பாடங்கள் அதிகம், தேர்வு எழுத நேரம் ஒதுக்குவதில்லை அதனால் தான் மதிப்பெண் குறைவு என்று எல்லாவித பழிகளையும் ஆசிரியர்கள் மீதும் பள்ளியின் மீதும் திணிக்கின்றனர்.

சரியில்லை என்றால் பள்ளி மாற்றலாமே என்றால், ஐயோ இல்லை அது சாதாரண விஷயம் இல்லை, மிகவும் கடினம், என்கிறார்கள் சில பெற்றோர்கள். சரி அவ்வாறே மாற்றினால் கூட வேறு பள்ளியிலும் இந்த மாறியான நிகழ்வு நிகழாது என்று என்ன நிச்சயம்? எத்தனை பள்ளிகள், எத்தனை ஆசிரியர் மாற்றுவது கொஞ்சம் சிந்தியுங்கள்?

அப்படியென்றால் என்ன செய்யலாம், இந்த பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்று யோசியுங்கள். அதே பள்ளியில் படிக்கும் மாணவன் மற்ற மாணவர்களை விட சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறான். அந்த மாணவனுக்கும் அதே பள்ளியில் அதே ஆசிரியர் தான் கல்வி கற்று தருகின்றார். இது எவ்வாறு சாத்தியமாகும். அப்போது காரணம் பள்ளியோ, ஆசிரியர்களோ கிடையாது உங்கள் பிள்ளைகள் தான்.

பெற்றோர்கள் ஆசிரியர்களை மாற்றுவதில் பயனில்லை, இவ்வாறு யோசிப்பதை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு சுமூகமாக இருப்பது முக்கியமாகும். பிள்ளைகள் பெற்றோர்கள் மீதும், பெற்றோர் பிள்ளைகள் மீதும் குறை கூறுகின்றனர்.

பெற்றோர்கள் தான் இதை செய் அதை செய் என வற்புறுத்துகின்றனர். எப்போது பார்த்தாலும் தன் உடன் பிறந்தோர் தங்கை அல்லது தம்பியிடம் சண்டை சச்சரவு... பிள்ளைகள் இவ்வாறு பலவித பிரசிச்சனைகளுக்கு உள்ளாவதால் படிப்பில் முழு கவனம் செலுத்துவது கடினமாகிறது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசலாம், அவர்கள் தேவை என்ன என்பதை அறிந்து செயல் படுத்தலாம்.

பிள்ளைகளும் பெற்றோர்களுக்கு கோபமூட்டாமல் தன்மையுடன் பேசி பழக வேண்டும். இவ்வாறு இருவருக்கும் தொடர்பு சுமூகமாக இருந்தால் பிள்ளைகளுக்கு எந்தவித பாதிப்புமின்றி படிப்பது சுலபமாகும். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக உங்களை மாற்றிக் கொண்டால் எதிலும் தோல்வி என்பதே கிடையாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us