நூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன? இதைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

நூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன? இதைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி?மார்ச் 29,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


சான்றிதழ், டிப்ளமோ, பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளைக் கொண்டது இத்துறை. இதில் எம்.பில்., பி.எச்டி., படிப்புகளும் கூட தரப்படுகின்றன. இத்துறையில் பி.ஜி.டி. லான் என்னும் சிறப்புப் பட்டயப் படிப்பை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடத்துகிறது.

தொலைநிலைக் கல்வி முறையிலும் கூட இதைப் படிக்கலாம். நூலகத் துறை எப்போதுமே நல்ல போட்டியைக் கொண்ட படிப்பு. பொதுவாக சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கேரளா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டில் நடத்தப்படும் நூலகத் துறைப் படிப்புகளில் பலர் சேர்ந்து வந்தனர். இந்த டிரெண்ட் இப்போதும் இருக்கிறது.

அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புகளை கொண்டது இந்தத் துறை. அரசுத் துறை வாய்ப்புகளை விட தனியார் துறையில் இப்படிப்புகளை முடித்திருப்பவர்கள் வரவேற்கப்படுகின்றனர். பரந்த பொது அறிவு, சிறப்பான தகவல் தொடர்புத் திறன், அடிப்படையில் படிக்கும் ஆர்வம், கம்ப்யூட்டர்களைக் கொண்டு டேட்டாபேசை உருவாக்குவதில் ஆர்வம் ஆகியவற்றைப் பெற்றிருப்பவருக்கு இத்துறை சிறப்பான வாய்ப்புகளைத் தருகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us