புத்தக கண்காட்சி | Kalvimalar - News

புத்தக கண்காட்சிமார்ச் 23,2024,10:33 IST

எழுத்தின் அளவு :

கோவை: கிதாப் லவ்வர்ஸ் சார்பில் சர்வதேச புத்தக கண்காட்சி, அவிநாசி ரோடு மீனாட்சி ஹாலில் நாளை வரை நடக்கிறது.


கிதாப் லவ்வர்ஸ் நிறுவத்தின் இந்த கண்காட்சியில், முக்கிய அம்சம் இவர்களின் லோடு தி பாக்ஸ் முறை. குறைந்த விலையில் புத்தகங்களை விற்பனை செய்ய, ரூ. 1199 முதல் 2999 வரை உள்ள பெட்டியை தேர்வு செய்து, பெட்டியில் எவ்வளவு புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம் என்ற கான்சப்ட்தான் லோடு தி பாக்ஸ்.


இது குறித்து, கிதாப் லவ்வர்ஸ் இணை நிறுவனர் தெரிவிக்கையில், கோவையில் இந்த புத்தக திருவிழாவை நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்களின் மூன்றாவது கண்காட்சி. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, அவரவர் ரசனைக்கு ஏற்ப அனைத்து விதமாக புத்தகங்களையும், குறைந்த விலையில் அளிப்பதுதான் எங்கள் நோக்கம்.


எங்களின் இந்தி புத்தக பிரிவில் 500க்கும், மேற்பட்ட தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் உள்ளன. கண்காட்சிக்கு வருவோருக்கு, போட்டிகளும் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு, இலவச புத்தகங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us