செங்கையில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்துவதில்... குளறுபடி! | Kalvimalar - News

செங்கையில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்துவதில்... குளறுபடி! மார்ச் 26,2024,09:30 IST

எழுத்தின் அளவு :

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தேர்தலில் பணியாற்றவுள்ள தேர்தல் அலுவலர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்களைக் கையாள்வது மற்றும் ஓட்டுப்பதிவு நடைமுறைகள் குறித்தான பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 


பயிற்சி மையங்களின் அமைவிடம் குறித்து ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு முறையான தகவல் அளிக்காததால், அவர்கள் பயிற்சி முகாம்களுக்கு குறித்த நேரத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.


லோக்சபா தேர்தலில், தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, நேற்று பயிற்சி நடந்தது.


சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், துரைப்பாக்கம் டி.பி., ஜெயின் கல்லுாரி மற்றும் எம்.என்.எம்.., பொறியியல் கல்லுாரியில் பயிற்சி முகாம் நடந்தது. அதேபோல், பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு, பல்லாவரம் கன்டோன்மென்ட் புனித தெரேசா மேல்நிலைப் பள்ளியிலும், தாம்பரம் சட்டசபை தொகுதிக்கு, கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி முகாம் நடந்தது.


செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியிலும், திருப்போரூர் சட்டசபை தொகுதியில், பையனுார் அறுபடைவீடு தொழில்நுட்பக் கல்லுாரியிலும் நடந்தது.


மதுராந்தகம் சட்டசபை தொகுதியில், அச்சிறுபாக்கம் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியிலும், செய்யூர் சட்டபை தொகுதியில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரியிலும் நடந்தது.


இந்த பயிற்சியில், ஓட்டுப்பதிவு நடைமுறை, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், அனைத்து வகை படிவங்கள் பூர்த்தி செய்தல், தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் நாட்குறிப்பு பின்பற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட 318 ஓட்டுச்சாவடிகளின் 1,708 அலுவலர்களுக்கு, பையனுார், ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லுாரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேலாயுதம், தாசில்தார்கள் திருப்போரூர் பூங்கொடி, திருக்கழுக்குன்றம் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர்.


தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அடையாள ஆவணம் வாயிலாக, வாக்காளரை உறுதிப்படுத்தி, அவரது வரிசை எண்ணை வாக்காளர் பட்டியலில் வட்டமிட்டு குறிப்பது, விரலில் மையிடுவது உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.


மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் அருண்ராஜ், பயிற்சி அளிப்பதை பார்வையிட்டார். அலுவலர்களிடம், பயிற்சியில் அறிந்ததை விவரிக்குமாறு கேட்டார். மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை லதா, கன்ட்ரோல் யூனிட், வி.வி.பேட் இயந்திர சாதனங்கள் ஆகியவற்றை இணைப்பது குறித்து விளக்கினார்.


ஓட்டுப்பதிவை தாமதமின்றி, குறித்த நேரத்தில் துவக்க, சாதனங்களை சரியாக இணைத்து பயன்படுத்துவதற்கான பயிற்சி அவசியம் என அறிவுறுத்தினார்.


சட்டசபை தொகுதி தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மொத்தம்


பி1 ப்2 சோழிங்கநல்லுார் 104 372 165 641பல்லாவரம் 189 242 105 536தாம்பரம் 455 211 241 907செங்கல்பட்டு 852 1154 765 2,771திருப்போரூர் 556 494 658 1,708செய்யூர் - தனி 462 397 727 1,586மதுராந்தகம் - தனி 773 520 729 2,022மொத்தம் 3,391 3,390 3,390 10,171


இல்லாததால் குழப்பம்


செங்கல்பட்டு மாவட்டத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்திருந்தார்.முதலில், அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் என, அனைவருக்கும், வெள்ளிக்கிழமை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று சுற்றறிக்கை விடப்பட்டது.தொடர்ந்து, சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. ஆனால், சனிக்கிழமையும் நடத்தப்படவில்லை.


இது குறித்து, கூடுவாஞ்சேரி பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:


லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக, இரண்டு, மூன்று முறைக்கு மேல் சுற்றறிக்கை வந்தது.அதற்கு நாங்கள் தயாராக இருந்த நிலையில், மூன்று முறையும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், எந்த விதமான அறிவிப்பும் வராததால், நேற்று பங்குனி உத்திர திருவிழா மற்றும் குருத்தோலை தினத்தை முன்னிட்டு, தங்களது சொந்த ஊர்களுக்கு சனிக்கிழமை மாலை சென்றோம்.திடீரென, சனிக்கிழமை இரவு 9:00 மணிக்கு, ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என சுற்றறிக்கை வந்தது. எங்களது பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக வந்தோம். பயிற்சி வகுப்புகளுக்கான இடங்கள் பற்றி சரியான அறிவிப்பு வரவில்லை. இதனால், ஏழு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பயிற்சி மையங்களில், யார், யார் எங்கு செல்வது என, குழப்பம் ஏற்பட்டது.


இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us