பி.இ., முடித்துள்ள நான் அப்படிப்பில் 60 சதவீதமே பெற்றிருக்கிறேன். எனக்கு படிப்பு முடிந்து 6 மாதங்களாகியும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தயவு செய்து விளக்கவும். | Kalvimalar - News

பி.இ., முடித்துள்ள நான் அப்படிப்பில் 60 சதவீதமே பெற்றிருக்கிறேன். எனக்கு படிப்பு முடிந்து 6 மாதங்களாகியும் சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தயவு செய்து விளக்கவும். மே 30,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களைப் போலவே பல இளைஞர்களும் இன்று குறைவான சதவீதத்துடன் தங்களது இன்ஜினியரிங் படிப்பை முடித்து பிரச்னைகளை சந்திக்கின்றனர். பொதுவாக பல நிறுவனங்களும் தங்களது எதிர்கால ஊழியர்களிடம் சிறப்பான மதிப்பெண்ணை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் குறைவாக மதிப்பெண் பெற்றிருப்பதால் அதை சரி செய்ய சம்பளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று உடனே ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியில் சேர முயற்சிக்கவும்.

ஓரிரண்டு ஆண்டுகள் அனுபவத்தில் நீங்கள் டொமைன் ஸ்கில் எனப்படும் புலன்சார் திறன்களை மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே நல்ல சம்பளத்துடன் கூடிய சிறப்பான நிறுவனத்தில் உங்களால் வேலை பெற முடியும். இதை நீங்கள் செய்யாவிட்டால் குறைவான சம்பளத்தில் பணியில் சேரும் முடிவும் வீணாகிவிடும். இது முடியாத போது தான் மேற்படிப்பு பற்றி நீங்கள் யோசிப்பது அறிவுறுத்தப்படுகிறது. மேற்படிப்பு ஒன்றில் சேர்ந்து உங்களால் அதில் நல்ல மதிப்பெண்ணுடன் வெளியே வருவதும் முக்கியம். இல்லாத போது அந்த முடிவும் வீணாகி விடும். இந்த கருத்துக்களை மனதில் கொண்டு முடிவெடுக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us