ஒருங்கிணைந்த எம்.டெக்., அட்மிஷன் | Kalvimalar - News

ஒருங்கிணைந்த எம்.டெக்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கேரள மாநிலம் கோட்டயத்தில் இயங்கிவரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னலாஜியில் முதுநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



படிப்பு: ஒருங்கிணைந்த எம்.டெக்., - ஏ.ஐ., மற்றும் டேட்டா சயின்ஸ். இதனுடன், பி.சி.ஏ., -எம்.சி.ஏ., பட்டமும் இணைந்து வழங்கப்படுகிறது.



தகுதிகள்: அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி. தகுதியுடைய டிப்ளமா படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தொழில்நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கல்வி நிறுவனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி, 4, 2024



விபரங்களுக்கு: https://imtech.iiitkottayam.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us