மாணவர் சேர்க்கை அறிவிப்பு | Kalvimalar - News

மாணவர் சேர்க்கை அறிவிப்பு

எழுத்தின் அளவு :

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



இளநிலை பட்டப்படிப்புகள்: பி.ஏ., பிஎஸ்.சி., பி.காம்., பி.சி.ஏ., பி.எல்.ஐ.எஸ்.,


கால அளவு:  3 ஆண்டுகள் 


தகுதி: மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



முதுநிலை பட்டப்படிப்புகள்: எம்.ஏ., எம்எஸ்.சி., எம்.காம்., எம்.சி.ஏ.,


கால அளவு: 2 ஆண்டுகள்


தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் மாணவர்கள் மூன்று ஆண்டுகால இளநிலைப் பட்டபடிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை: https://ignouiop.samarth.edu.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 



இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31



விபரங்களுக்கு: www.ignou.ac.in 



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us