ஏ.ஐ.சி.டி.இ., உதவித்தொகை | Kalvimalar - News

ஏ.ஐ.சி.டி.இ., உதவித்தொகை

எழுத்தின் அளவு :

பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வியை தொடரும் வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு ’சுவநாத்’ எனும் உதவித்தொகையை வழங்குகிறது.



உதவித்தொகை விபரம்: ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் 3 ஆண்டு வரையிலான டிப்ளமா மற்றும் 4 ஆண்டு வரையிலான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. டிப்ளமா அளவில் ஆயிரம் பேர், பட்டப்படிப்பு அளவில் ஆயிரம் பேர் என மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்ய்யப்படுகின்றனர். 



கல்விக் கட்டணம் மற்றும் கம்ப்யூட்டர், புத்தகம், சாப்ட்வேர், இதர கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான செலவினங்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.



தகுதிகள்: பெற்றோர் இல்லாத மாணவ, மாணவிகள் அல்லது கோவிட் -19 பெருந்தொற்றால் தாய் அல்லது தந்தையரை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி உண்டு. 



இட ஒதுக்கீடு: இந்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறையின்படி, உதவித்தொகை வழங்கப்படுகிறது.



விபரங்களுக்கு: https://scholarships.gov.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us