யு.ஜி.சி., உதவித்தொகை | Kalvimalar - News

யு.ஜி.சி., உதவித்தொகை

எழுத்தின் அளவு :

மாணவ, மாணவிகளிடம் முதுநிலை பட்டப்படிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு உதவித்தொகையை வழங்குகிறது.



உதவித்தொகை விபரம்: தேர்வு செய்யப்படும் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ஓர் ஆண்டில் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். 



மொத்த கால அளவு: 2 ஆண்டுகள்



இட ஒதுக்கீடு: இந்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறையின்படி, உதவித்தொகை வழங்கப்படும். எனினும், மாணவிகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு உண்டு.



தகுதிகள்: முதல் முறையாக முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை பெற தகுதி உண்டு. ஏற்கனவே, முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த உதவிதொகைக்கு தகுதி இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழுநேரமாக வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். 



வயது வரம்பு: 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.



விபரங்களுக்கு: https://scholarships.gov.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us