ஜே.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வு | Kalvimalar - News

ஜே.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வு

எழுத்தின் அளவு :

பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., உட்பட பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்‌சாமினேஷன் - ஜே.இ.இ., மெயின் தேர்விற்கு தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.



என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என தேர்வுகளை நடத்துகிறது. ஜே.இ.இ.,- மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவகள் மட்டுமே ஜே.இ.இ.,- அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்க முடியும். 



படிப்புகள்: பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பி.டிசைன், பி.பிளான் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வாக ஜே.இ.இ., உள்ளது. மேலும், இளநிலை பொறியியல் படிப்புகளுடன், எம்.டெக்., / எம்.பி.ஏ., போன்ற இரட்டை பட்டப்படிப்புகளிலும், ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்காக, இத்தேர்வு நடத்தப்படுகிறது. 



தகுதிகள்: 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களை கட்டாயப் பாடங்களாக கொண்டிருக்க வேண்டும். மேலும், வேதியியல், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், தொழில்நுட்ப தொழில்கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். 



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 2



விபரங்களுக்கு: https://jeemain.nta.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us