கடந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக இன்போசிஸ் நிறுவனப் பணிக்காக எனது மகள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவளுக்குப் பணி நியமனக் கடிதம் தரப்படவில்லை. காத்திருப்பதில் அர்த்தமிருக்கிறதா? | Kalvimalar - News

கடந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக இன்போசிஸ் நிறுவனப் பணிக்காக எனது மகள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவளுக்குப் பணி நியமனக் கடிதம் தரப்படவில்லை. காத்திருப்பதில் அர்த்தமிருக்கிறதா?ஜூலை 12,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

கவலைப்பட வேண்டாம். இந்த ஆண்டு இன்போசிஸ் கேம்பஸ் இன்டர்வியூக்களை தாமதப்படுத்தினாலும் கடந்த ஆண்டு அது தேர்வு செய்து வைத்துள்ள 18 ஆயிரம் பேருக்கு விரைவில் பணி நியமன ஆணையைத் தரவிருப்பதாக அறிவித்துள்ளது.

தற்போது நிலவி வரும் உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் புதிய கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்படவில்லை என்றாலும் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருப்போரைக் கட்டாயம் பணிக்கு எடுத்துக் கொள்ளப் போவதாக இன்போசிஸ் அறிவித்திருப்பதை நீங்கள் தைரியமாக நம்பலாம். அமெரிக்க அரசின் அவுட்சோர்சிங் குறித்த புதிய கொள்கை முடிவுகள் நமது ஐ.டி., துறையை பாதிப்பது உண்மை தான். எனினும் பரபரப்பூட்டுமளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்பதே உண்மை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us