மீன்களையும் படிக்கலாம்! | Kalvimalar - News

மீன்களையும் படிக்கலாம்!

எழுத்தின் அளவு :

பிஷரி சயின்ஸ் பாடம், பல்வேறு உட்பிரிவுகளை உள்ளடக்கியது. ஓசனோகிராபி, இகாலஜி, உயிரியியல், பொருளாதாரம் போன்றவைகள் அடங்கும். கடல் வளத்தை காப்பதில் இவர்களது பங்கு முக்கியம். இந்தியாவில் 80 லட்சம் பேர் மீன்பிடி துறையில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவளத்தை பெருக்க பிஷரி சயின்ஸ் படித்தவர்களின் ஆலோசனைகள் தவிர்க்க முடியாதது. கடல் வாழ் உயரினங்களை காப்பதிலும் பிஷரி சயின்ஸ் படித்தவர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். இவர்கள் அக்குவா கல்சரிஸட், பார்ம் மேனேஜர், ஏற்றுமதியாளர், வர்த்தக மேலாளர் போன்ற பதவிகளை வகிக்க முடியும். நவீன மீன்பிடி தொழில்நுட்பங்களையும் இவர்கள் தெரிந்து கொள்வது கூடுதல் பலம்.

கல்வி தகுதி

பிளஸ்2 வில் உயரியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்திருப்பது, அடிப்படைக் கல்வி தகுதியாக கருதப்படுகிறது. இளங்கலையில், பேச்சுலர் ஆப் சயின்ஸ் இன் பிஷரி (பி.எஸ்.சி., பிஷரி), பேச்சுலர் ஆப் பிஷரி சயின்ஸ்(பி.எப்.எஸ்சி.,) போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. முதுநிலை பிஷரி சயின்ஸ் படிப்புகளும் உள்ளன. இதுதவிர டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.

வேலை வாய்ப்பு

உலகின் பெரும் பகுதி கடலால் சூழப்பட்டுள்ளது. உலகளவில் கடல் சார் துறையில் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதால் அதனைச் சார்ந்த பிஷரி சயின்ஸ் படித்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. இவர்களுக்கு வெளிநாடுகளிலும், அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

கல்வி நிறுவனங்கள்

சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் எஜூகேசன், மும்பை
காலேஜ் ஆப் பிஷரிஸ், பெர்காம்பூர், ஒரிசா
காலேஜ் ஆப் பிஷரிஸ், எர்ணாகுளம், கேரளா
சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரிஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கோல்கட்டா
ஆந்திரா பல்கலைக்கழகம், விஷாகப்பட்டினம்
காலேஜ் ஆப் பிஷரிஸ் சயின்ஸ், குஜராத்
காலேஜ் ஆப் பிஷரிஸ், பீகார்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us