சிறப்பான செராமிக் டெக்னாலஜி | Kalvimalar - News

சிறப்பான செராமிக் டெக்னாலஜி

எழுத்தின் அளவு :

வித்தியாசமான வேதியியல் படிப்பை விரும்புகிறவர்களுக்கு, செராமிக் டெக்னாலஜி சிறப்பான தேர்வாக அமையும். இத்துறை படிப்புகளில், செராமிக்கின் குணாதிசயங்கள், உற்பத்தி, டிசைனிங், பயன்பாடு போன்றவை கற்றுத்தரப்படுகிறது.

செராமிக் என்பது களிமண், சிர்கோனியா போன்றவற்றை மூலப் பொருட்களாகக்கொண்டது. செங்கல், சிமென்ட், ஓடு, பைப், கண்ணாடி போன்றவை தயாரிக்கும் துறைகளில் செராமிக்கின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. பானைகள், ஸ்பார்க் பிளக்குகள், எலக்ட்ரிகல் இன்சுலேட்டர்கள், கட்டிங் உபகரணங்கள், பேரிங்க்ஸ் போன்றவற்றிலும் இதன் பயன்பாடு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தொழிற்சாலைப் பொருட்கள், டையோடுகள், கம்ப்யூட்டர் மெமரி பாகங்கள், கெபாசிட்டர் போன்றவற்றிலும் பயன்படுகிறது.

இந்த உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களில், சிறப்பான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. செராமிக் டெக்னாலஜி படித்தவர்கள் தொழிற்சாலைகளிலும், உற்பத்திக் கூடங்களிலும் அதிகமாக பணியில் அமர்த்தப்படுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுகூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் பணிபுரிய வாய்ப்புள்ளது.

இதில் பி.எஸ்சி., பி.டெக்., பி.., படிப்புகள் வழங்கப்படுகின்றன. பட்டமேற்படிப்பும் உண்டு. இவற்றைப் படித்து முடிப்பவர்களுக்கு சிமென்ட், இரும்பு எக்குத் தொழிற்சாலை, நியூக்ளியர் ஆலைகள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்

* அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

* பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், மும்பை

* காலேஜ் ஆப் செராமிக் டெக்னாலஜி, கோல்கட்டா

* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் செராமிக்ஸ், கோல்கட்டா

* யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜிகோல்கட்டா

* ரீஜினல் இன்ஜினியரிங் காலேஜ், ரூர்கேலா

* பி.டி.., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், குல்பர்கா

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us