நிதி மற்றும் முதலீட்டு துறையில் ஆர்வமுள்ளவருக்கான படிப்பு | Kalvimalar - News

நிதி மற்றும் முதலீட்டு துறையில் ஆர்வமுள்ளவருக்கான படிப்பு

எழுத்தின் அளவு :

பைனான்சியல் அன்ட் இன்வெஸ்ட்மென்ட் அனலிசிஸ் என்ற பெயரிலான இளநிலைப் படிப்பு, நிதித் துறையில் புதிதாக புகழ்பெற்ற ஒன்றாக திகழ்கிறது. இப்படிப்பில், நிதி மற்றும் முதலீட்டு தொடர்பான அனைத்து விஷயங்களும் உள்ளடங்கியுள்ளன. அமிட்டி பல்கலைக்கழகத்தில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

இப்படிப்பை பற்றி...

இந்திய நிதி சந்தைகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கான, 6 செமஸ்டர்களைக் கொண்ட ஒரு நிபுணத்துவ இளநிலைப் பட்டப் படிப்பாகும்(Bachelor of Financial and Investment Analysis) இது. இதனை முடித்த ஒருவர், முதலீட்டு கம்பெனிகள், கேபிடல் மார்க்கெட், வெளிநாட்டு எக்ஸ்சேஞ்ச் டீலர்கள், பரஸ்பர நிதி நடவடிக்கைகள்(Mutual fund operations) மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியலாம்.

ஒரு மாணவர், எம்.பி.ஏ., படிப்பு நிலையில், இத்துறையை ஒரு Elective -ஆக தேர்வு செய்யும் முன்னதாக, இப்படிப்பை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது, ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இப்படிப்பின் முக்கிய நோக்கமே, நடைமுறை வணிக சிக்கல்கள் குறித்து, மூன்று வருட தியரி மற்றும் தீவிர தொழில்துறை பயிற்சிகளின் மூலமாக மாணவர்களுக்கு நுட்பமான அறிவைக் கொடுப்பதாகும்.

இப்படிப்பில் அடங்கிய பேப்பர்கள், Corporate taxation, auditing, corporate restructuring, merchant banking, investment analysis and portfolio management போன்ற அம்சங்களைக் கொண்டவை.

இன்டர்ன்ஷிப் அவசியம்

இப்படிப்பின்போது, 4ம் செமஸ்டரின் முடிவில், நடைமுறை வணிக மற்றும் நிதி உலகின் தன்மைகளைப் பற்றி அறிய, 8 முதல் 10 வாரங்கள் வரையிலான கோடைகால பயிற்சி திட்டத்தில், மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

பணி வாய்ப்புகளும், சம்பளமும்...

இப்படிப்பை முடித்த பிறகு, ஒரு தனிநபர், பேங்கிங், எகனாமிக்ஸ், இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஈக்விடி ரிசர்ச் அனலிசிஸ், பைனான்சியல் அக்கவுன்டிங் அன்ட் ஆடிட்டிங், ஆடிட்டிங் அன்ட் காஸ்ட் அக்கவுன்டிங், கம்பெனி செக்ரெட்ரியல் பிராக்டிஸ் மற்றும் பாரின் டிரேடு பிராக்டிஸ் அன்ட் புரசிஜர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்.

எனவே, ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமே படிப்பது, இன்றைய நடைமுறைத் தேவைகளுக்குப் போதாது. வேலை வாய்ப்பு சந்தையில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டுமெனில், ஒருவர் ஒரேயொரு விஷயத்தை மட்டுமே தெரிந்து வைத்திராமல், ஒரு துறையின் பலவிதமான அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும்.

இப்படிப்பை முடித்தவருக்கான அதிகபட்ச சம்பளமாக, ஆண்டிற்கு ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. சராசரி சம்பளமாக ரூ.5.5 லட்சத்திற்கும் மேல் வழங்கப்படுகிறது. ஆனால், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து வெளிவரும் மாணவர்களுக்கே நல்ல சம்பளத்தில், எளிதில் பணிவாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதும் ஒரு நடைமுறை உண்மை.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

அமிட்டி பல்கலைக்கழகம், வணிகப் படிப்புகளுக்கான ஷஹீது சுக்தேவ் கல்லூரி (டெலலிப் பல்கலைக்கழகம்)

சேர்வதற்கான தகுதிகள்

பள்ளிப் படிப்பை முறைப்படி முடித்திருக்க வேண்டும் மற்றும் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கும் முறை - எழுத்து தேர்வும், அதனையடுத்து நேர்முகத் தேர்வும் நடைபெறும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us