பசுமை தொழில்நுட்பம் | Kalvimalar - News

பசுமை தொழில்நுட்பம்

எழுத்தின் அளவு :

கடந்த 1976ம் ஆண்டு, உலகெங்கும் எண்ணெய் சிக்கல் ஏற்பட்டபோது, எட்வர்ட் ஹேமர் என்ற பொது எலக்ட்ரிக் பொறியாளர், மின்சாரத்தை குறைவாக எடுத்துக்கொள்ளும் சி.எப்.எல்., விளக்கை கண்டுபிடித்தார். அதேபோன்று, சில ஆண்டுகளுக்கு முன்பாக, சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையிலான Compressed Natural Gas (CNG) கண்டுபிடிக்கப்பட்டது. ஆற்றல்களில் ஒருவகையான நியூக்ளியர் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்டபோது, கார்பன் வெளியேற்றம் குறைந்தது. மேற்கூறிய அனைத்து வகை கண்டுபிடிப்புகளும், பசுமை தொழில்நுட்பம் (Green technology) என்ற வகைக்குள் அடங்கும். உலகின் சுற்றுச்சூழலை காப்பதில், இந்த தொழில்நுட்பம் பெரும் பங்காற்றுகிறது.

சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைக்கும் பொருட்டு, பசுமை பாதுகாப்பிற்கான நீடித்த ஆற்றலோடு, சுற்றுச்சூழல் அறிவியலை இணைத்து உருவானதுதான் பசுமை தொழில்நுட்பம். அனைத்து இயற்கை வளங்களும் தீரும்போது, பசுமை தொழில்நுட்பம் மட்டுமே, மனிதனை காப்பதற்கு முன்வரக்கூடிய ஒன்றாக இருக்கும். தொடக்கமாக, எம்.டெக்., கிரீன் டெக்னாலஜி படிப்பு, இந்தியாவிலேயே இரண்டு கல்வி நிறுவனங்களில்தான் தொடங்கப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் MANIT ஆகியவைதான் அந்த கல்வி நிறுவனங்கள்.

இப்படிப்பு எப்படி?

கிரீன் டெக்னாலஜி என்பது, Green energy generation, Green computing, Green building, Green processes, Waste management, Nanotechnology and energy and environmental sustainability போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. கிரீன் டெக்னாலஜியில் முதுநிலைப் படிப்பானது, Sustainability, Innovation and waste management போன்ற துறைகளில், மாணவர்களுக்கு நல்ல அறிவைத் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பசுமை ஆற்றல் தொழில்நுட்பம், ரசாயன அறிவியல், உயிரியல் அறிவியல், திட்ட மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கொள்கை ஆகிய துறைகளில் பணிபுரியும் நிபுணர்கள், மாணவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர்.

மேலும், மாணவர்கள், எனர்ஜி, modelling, என்வைரன்மென்ட், கெமிஸ்ட்ரி, மேனேஜ்மென்ட் மற்றும் இதர தொடர்புடைய துறைகள் ஆகியவை தொடர்பான Bridge படிப்புகளின் மூலமாக, பல்வேறு வகையான ஸ்பெஷலைசேஷன் படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளை பெறுகிறார்கள். தங்களின் பின்னணி மற்றும் ஆர்வத்தின் பொருட்டு, தங்களுக்கு பொருத்தமானதை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஒவ்வொரு தியரி படிப்பும், ப்ராஜெக்ட் உள்ளடக்கத்தை கொண்டதாக இருக்கும். அந்த ப்ராஜெக்ட் உள்ளடக்கம், தனித்ததாகவோ அல்லது குழு அடிப்படையானதாகவோ இருக்கும். எம்.டெக்., படிப்பிற்கான தகுதியைப் பெற, குறைந்தபட்சம் 72 கிரெடிட்டுகளை, ஒவ்வொரு மாணவரும் பெற வேண்டும்.

நடைமுறை அனுபவம்

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களிலுள்ள ஆய்வகங்கள், பல்வேறான பசுமை உபகரணங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு நாளும், மாணவர்களுக்கு நடைமுறை வகுப்புகள் உண்டு. அதன்மூலம், அந்த உபகரணங்களில் பணிபுரியும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். மேலும், சோலார் பிளாண்டும் உண்டு. இதன்மூலம், எவ்வளவு மற்றும் என்ன அடர்த்தியில் சோலார் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது என்று அறிந்துகொள்ளலாம்.

மேலும், வெவ்வேறான எரிபொருட்களின் கலோரிக் மதிப்பை அளவிடும், கலோரி மீட்டரும் உண்டு. இதன்மூலம், Bio-mass -இலிருந்து, தரமான உயிரி எரிபொருளைப் பெற உதவுகிறது. மேலும், அரிசி உமி மற்றும் கோதுமை உமி ஆகியவற்றை எரியும் பொருளாக மாற்றும் Pelletizing machine -ம் உண்டு. இந்த புதியவகை எரிபொருள், நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், குறைந்தளவு கார்பனையே வெளியேற்றுகிறது.

இப்படிப்பில் சேர...

மெட்டீரியல் சயின்ஸ், பிசிகல் சயின்ஸ், கெமிக்கல் சயின்ஸ், பயாலஜிகல் சயின்ஸ் ஆகிய ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி., படித்தவர்கள் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் ஆகிய ஏதேனும் ஒன்றில் பி.இ., அல்லது பி.டெக்., படித்தவர்கள், குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருந்தால், இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

கேட்(GATE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். சராசரி போட்டி உள்ள, குறைந்தபட்ச இட எண்ணிக்கையைக் கொண்ட படிப்பாகும் இது. இது ஒரு புதிய படிப்பாக இருப்பதால், அவ்வளவு போட்டி இன்னும் ஏற்படவில்லை. MANIT கல்வி நிறுவனத்தில் 18 இடங்கள் மட்டுமே, இப்படிப்பில் உள்ளன.

வேலை வாய்ப்பு

ஆராய்ச்சி மற்றும் தனியார் துறைகளில், இப்படிப்பை முடித்தோருக்கான பணி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சோலார் எனர்ஜி, காற்று எனர்ஜி மற்றும் பயோ மாசஸ் ஆகிய துறைகளோடு தொடர்புடைய நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், அரசுத்துறையின் அங்கீகாரம் இன்னும் சரியான அளவில், இத்துறை படிப்புகளுக்கு கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய குறை.

இத்துறையில் இளநிலைப் படிப்பு இல்லாதது ஒரு குறையாக உள்ளது. எனவே, அப்படிப்பையும் கொண்டு வந்தால்தான், மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும். MANIT கல்வி நிறுவனத்தில், பி.டெக்., எனர்ஜி படிப்பு மூடப்பட்டது. ஏனெனில், பொதுத்துறையில் அப்படிப்பு அங்கீகரிக்கப்படவில்லை.

குறைவான வேலைவாய்ப்பு மற்றும் மிகக் குறைந்தளவு சம்பளம் போன்றவையும், அப்படிப்பு கைவிடப்பட்டதற்கு காரணங்கள். ஆனால், பல சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரிப்பது என்னவெனில், இத்துறை நிபுணர்கள் அதிகளவில் இப்போதே உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் நெருக்கடி நிலை உருவாகும்போது, தேவையான சுற்றுச்சூழல் நிபுணர்கள் இல்லாமல், திண்டாட வேண்டியிருக்கும்.

இப்படிப்பை வழங்கும் முக்கிய கல்வி நிறுவனங்கள்

* Maulana Asad National Institute of Technology, Bhopal

* Pondycherry university

மாணவர் சேர்க்கை முறை மற்றும் காலகட்டம்

* GATE மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

* ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us