எல்.பி.ஓ., - சட்டத் துறை | Kalvimalar - News

எல்.பி.ஓ., - சட்டத் துறை

எழுத்தின் அளவு :

இன்றைய நிலையில், தங்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுக்கும் முறையில், இளைஞர்களிடையே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலை சட்ட மாணவர்களுக்கும் முற்றிலும் பொருந்தும். பாரம்பரியமற்ற சட்டத் துறைகளில் ஈடுபட்டு, தங்களுக்கான வருவாயை ஈட்ட சட்ட மாணவர்கள் தயங்குவதில்லை. அவர்கள், LPO (Legal Processing Outsourcing) துறையில் ஈடுபடுவதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.

சர்வதேச அளவிலான கிராக்கி

சட்டத்துறை சேவைகளுக்கான செலவினங்கள், கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் அதிகரித்து வருகின்றன. அதன் விளைவாக, பல in - house சட்டத் துறைகள் மற்றும் சட்ட மையங்கள் உருவாகியுள்ளன. அதிகளவிலான சட்டம் தொடர்பான பணிகள் கொடுக்கப்படுகையில், செலவு மற்றும் தரம் ஆகியவற்றைப் பராமரிப்பதில் தீவிர கண்காணிப்பு பின்பற்றப்படுகிறது. இதுபோன்ற சூழலில், LPO நிறுவனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை, சட்டப் பணிகளை ப்ராஜெக்ட் தொடர்பான நடைமுறையாக மாற்றி, அதனை தரப்படுத்துவதன் மூலமாக, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு, ரிஸ்க் இல்லாமல், நல்ல லாபகரமான ஒரு சேவையை வழங்குகின்றன.

முன்னேறிவரும் LPO தொழில்துறை, கார்பரேஷன்கள், LPO சேவை வழங்குநர்கள் மற்றும் சட்ட அமைப்புகள் ஆகியவற்றுக்கிடையில் உள்ள குறிப்பிடத்தக்க தொடர்பையும், ஒருங்கிணைப்பையும் காட்டியிருக்கிறது. LPO அளிக்கும் நன்மைகள் ஏராளமானவை.

சேவைகளின் விபரம்

கடந்த 2012ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, உலக LPO சந்தையின் மதிப்பு 2.4 பில்லியன் டாலர்கள் மற்றும் அதன் மதிப்பு ஆண்டுதோறும் 28% அதிகரித்து வருகிறது. KPO துறையில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு உபதுறையாக LPO திகழ்கிறது. LPO வழங்கும் பணி வாய்ப்புகள் பலதரப்பட்டவை.

சட்ட ஆராய்ச்சி, வரைவு மற்றும் பகுப்பாய்வு உள்ளிட்ட மிகவும் உயர்ந்தபட்ச பணிகளை மேற்கொள்வதோடு அல்லாமல், Legal back-end operations உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது. LPO என்பவை, வெறுமனே அவுட்சோர்சிங் சேவை அமைப்பாக மட்டுமே அல்லாமல், அதற்கும் மேம்பட்ட உயர்தொழில்நுட்பம் மற்றும் தரம் அடிப்படையிலான சேவை வழங்குநராக பணியாற்றுகிறது.

பெரியளவிலான LPO சேவை மையங்கள், Litigation support, Corporate legal support - Contract management + M&A Due Diligence, Intellectual property and ancillary services போன்ற பலதரப்பட்ட சேவைகளை வழங்குகின்றன. இவற்றில் சில, மிக நுட்பமான வியூகத்தன்மையும், சிறப்பு நுணுக்கத் தன்மையும் வாய்ந்தவை.

பணி வாய்ப்புகள்

LPO என்பது அடுத்த தலைமுறை சட்டப் பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த வேலைவாய்ப்பு அம்சமாக திகழ்கிறது. இத்துறையில் இருக்கும் பணி வாய்ப்புகள் கணக்கற்றதாக இருப்பதோடு, உற்சாகம் தரக்கூடியதாகவும் உள்ளது. புத்தாக்கத் திறன் மற்றும் புதுமைகளைப் படைக்க வேண்டுமென்ற ஆர்வமுடைய சட்டப் பட்டதாரிகளுக்கு இந்த LPO துறை ஒரு வரப்பிரசாதம்.

Administrative work (contract abstraction, patent proofreading, litigation coding), Higher complexity services (eDiscovery analytics, litigation readiness assesments, collections, expert witness services, patent drafting, patent analytics services, contract negotiations, obligation management) போன்ற பல பிரிவுகளில் LPO துறையின் வேலை வாய்ப்புகள் பரந்துள்ளன.

இது எந்த வகையில் வேறுபட்டது?

LPO துறையில் பணிபுரியும் ஒரு சட்டப் பட்டதாரி, உலகளாவிய சட்ட நுணுக்கங்களைப் பற்றி அறிந்துகொள்வதுடன், உலகளாவிய கலாச்சார அறிமுகத்தையும் பெறுகின்றனர். ஒரு கார்பரேட் சூழலில், வெவ்வேறான ப்ராஜெக்ட்களில் பணிபுரிய வேண்டியிருக்கும். மேலும், உலகின் பல பகுதிகளில், பணியாளர்களை மாற்றிக்கொள்ளும் திட்டமும் உள்ளது.

உலகளாவிய நிலையில் பணிபுரியும்போது, சர்வதேச ப்ராஜெக்ட்களை இந்தியாவிற்கு மாற்றும் வாய்ப்புகளையும் LPO பணியாளர்கள் பெறுகிறார்கள்.

இப்பணியின் நன்மைகள்

பணியாட்களின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றுக்கு, LPO நிறுவனங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. இவைத்தவிர, நல்ல சம்பளம், சிறந்த அங்கீகாரம் மற்றும் சர்வதேச பன்முக வாய்ப்புகளை பெறுதல் போன்ற பல்வேறான நன்மைகள் கிடைக்கின்றன.

LPO பணிச் சூழல்கள், குழு மேலாண்மைத் திறன்களையும் கற்றுக்கொடுப்பதால், எதிர்கால தலைவர்களை உருவாக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

LPO -க்கள் பின்பற்றும் திறன் அடிப்படையிலான ஆட்கள் பணியமர்த்தும் செயலின் மூலமாக, வேலைக்கேற்ற பொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்ய முடிகிறது. உதாரணமாக, Contract solutions போன்ற பணிகளுக்கு, அதற்கேற்ற தனித்திறன்கள் தேவை.

மேலும், இந்த தேர்வு செய்தல் பணி, பல அம்சங்களையும் உள்ளடக்கி, பரந்த நிலையில் நடைபெறுவதாகும். ஒரு குறிப்பிட்ட பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர், நன்றாக சோதித்து அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us