சுற்றுச்சூழல் பாதுகாப்பு படிப்பு | Kalvimalar - News

சுற்றுச்சூழல் பாதுகாப்பு படிப்பு

எழுத்தின் அளவு :

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. நமது பூமியால், 700 கோடி மக்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பதற்கு சிரமமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், தேவைக்கதிகமான நுகர்வு கலாச்சாரம் மற்றும் அபரிமித கார்பரேட் வளர்ச்சி.

இயற்கை வளத்தை நாம் தேவைக்கதிமாக சுரண்டுகிறோம். உலகமயப்படுத்தப் பட்ட வணிகப் போட்டிகள், உலகை மெல்ல அழித்து வருகின்றன. பெருகிவரும் முறையற்ற தொழிற்சாலைகள், அனைத்துவகை நீர்நிலைகளையும், விவசாய நிலங்களையும் பாழாக்கி வருகின்றன.

தற்போது, தண்ணீர் முதற்கொண்டு பெட்ரோகெமிக்கல் வரையான, நமது வளங்கள் அனைத்தும் வேகமாக தீர்ந்து வருகின்றன. தற்போது, மாற்று வளங்களைத் தேடக்கூடிய மற்றும் வளங்களைப் பாதுகாப்பது குறித்து ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டிய தேவை கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்பட பல அமைப்புகளுக்கும் வந்துள்ளது. ஒரு புதிய ப்ரஜெக்டை தொடங்கும் முன்னதாக, சுற்றுச்சூழல் காரணிகளை யோசிக்கும் நிலை வந்துள்ளது.

யுனெஸ்கோ உள்ளிட்ட பல சர்வதேச ஏஜென்சிகள், சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் தொடர்பாக, சர்வதேச ப்ரோகிராம்களை நிறுவ ஏற்பாடுகளை செய்துள்ளன. இவை, இன்டர்டிசிப்ளினரி தன்மை வாய்ந்ததாகும். பல இந்திய கல்வி நிறுவனங்கள், Environmental Science மற்றும் அதுதொடர்பான துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான படிப்புகளை வழங்குகின்றன.

இப்படிப்பில் சேர்வதன் முக்கியத்துவம்

இதுவொரு சுவாரஸ்யமான மற்றும் பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்ட துறையாகும். இப்படிப்பை, ஒரு பணி வாய்ப்புக் கருவியாக கருதாமல், தொழிலாக கருதி தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு பல்வேறான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இப்படிப்பில் சேரும் ஒருவர், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த ஒரு சிறந்த ஐடியாவைப் பெறுவதுடன், அவற்றைக் களைவதற்கு ஒரு தீர்மானமான மனதுடன் அவர்கள் முன்வருகிறார்கள்.

பலர், இப்பாடத்தை, தங்களின் வருங்கால துறையாக அமைத்துக்கொள்ளும் எண்ணத்துடன் படிக்கிறார்கள். ஆனால், இத்துறையைப் பொருத்தவரை, சிறந்த அகப்பார்வையைப் பெற்ற நபர்களால்தான், நிபுணர் நிலைக்கு உயர்ந்து, வெற்றிபெற்று சாதிக்க முடியும்.

சிறந்த பாடத்திட்டம் மற்றும் அணுகுமுறை

இந்த மூன்று ஆண்டு படிப்பில், சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் பற்றி மாணவர்கள் கற்பார்கள். Natural resources, environmental pollution, ecosystem and population ecology, tools and techniques in environmental science, biodiversity conservation, environmental laws and environmental biotechnology, environment impact assessment, environmental economics, chemistry and environmental movements போன்ற பல அம்சங்கள் அவற்றுள் அடங்கும். மேலும், இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவருக்கு, interdisciplinary approach என்பது மிகவும் முக்கியம். வெறுமனே அவிறியல் அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், சமூக, பொருளாதார மற்றும் சட்டம் தொடர்பான விஷயங்களையும் ஆழ்ந்து கவனித்து கற்றுக்கொள்வது முக்கியம்.

கள அனுபவம்

சுற்றுச்சூழல் அறிவியல் என்று வந்துவிட்டாலே, வெளி உலகம்தான் நமது ஆய்வகம்(Lab). பொதுவாக, இளநிலைப் படிப்புகளில், பிராக்டிகல் அம்சங்களைவிட, தியரி சார்ந்த அம்சங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றாலும், இந்தப் படிப்பை பொறுத்தவரை, வெளிவுலக நடைமுறை அறிவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

இளநிலை படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், பல்வேறான பூகோள அம்சங்கள் மற்றும் காலநிலை கொண்ட பகுதிகளுக்கு field visit செய்து, வெவ்வேறான கூறுகளை அறிதல் முக்கியம்.

முதுநிலைப் படிப்பில் கிடைப்பது என்ன?

இளநிலைப் படிப்பில், ஒரு வலுவான அடிப்படையைப் பெற்றுக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட அறிவுநிலையை அடையும் தன்மையைப் பெற்ற பிறகு, முதுநிலைப் படிப்புக்கு ஒரு மாணவர் வருகிறார். இத்துறையில் இளநிலை படிப்பை முடிக்கும் பல மாணவர்கள், ஸ்பெஷலைசேஷன் மேற்கொள்ளும் பொருட்டு, முதுநிலை நோக்கி வருகிறார்கள்.

Environmental pollution, resource conservation, GIS and remote sensing, biodiversity, geoscience, ethno-botany, EIA, urban management போன்றவைகளில், ஏதேனுமொன்றில், முதுநிலை மாணவர்கள், ஸ்பெஷலைசேஷன் மேற்கொள்ள முடியும்.

ஆர்வமே முக்கியம்

சுற்றுச்சூழல் துறையில் சாதித்து பெயர் வாங்க வேண்டுமெனில், அதீத ஆர்வம் இருப்பது முக்கியம். பொறுமையும், கடின உழைப்பும் மிகவும் முக்கியம். ஏனெனில், இத்துறையில் ஒரு சிறந்த நிபுணராக உருவாக, வருடக்கணக்கில் ஆகும் என்பதை மறத்தல் கூடாது.

பணி வாய்ப்புகள்

இத்துறை சார்ந்த படிப்புகளை முடித்த மாணவர்கள், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், சுற்றுப்புறச்சூழல் தொடர்பான ஆய்வகங்கள், தேசிய பூங்காக்கள், பயோஸ்பியர் ரிசர்வஸ், நீர்வளம், மண்வளம் மற்றும் வேளாண் வளம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள், என்.ஜி.ஓ.,க்கள், கார்பரேட் நிறுவனங்களின் பசுமைவளத் துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

சுற்றுச்சூழல் வாரியங்கள் மற்றும் ஆய்வகங்களில் பணிபுரிபவர்களுக்கு, சுற்றுச்சூழலுக்கான டேட்டாவை உருவாக்கும் பொறுப்பு இருக்கிறது. மேலும், சுற்றுச்சூழல் துறையில் ஆலோசகர்களாக பணியாற்ற விரும்புவோர், சுற்றுச்சூழல் அறிவியல் அல்லது பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் குறித்தும் தெளிவான அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் ஏஜென்சிகளுக்கான சேவைப் பணிகள் என்பது, environmental assessment, site remediation, natural resource management, environmental auditing, waste management, environment policy development உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

வெளிநாட்டு பணி வாய்ப்புகள்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதென்பது இன்றைய நிலையில் உலகளாவிய உடனடித் தேவையாக இருப்பதால், இதற்கான நிபுணர்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். எனவே, நீங்கள் மிகவும் குறைந்தளவு GRE மதிப்பெண் பெற்றிருந்தால்கூட, சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் முதுநிலைப் படிப்பு சேர்க்கையை, வெளிநாடுகளில் பெற்றுவிடலாம்.

இப்படிப்பை முடித்தவருக்கு, வெளிநாடுகளில், environment engineers, consultants, researchers, journalists போன்ற பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

சம்பளம்

நீங்கள் பணிக்கு சேரும் நிறுவனம் மற்றும் உங்களின் பணிப் பொறுப்பு ஆகியவற்றைப் பொறுத்து சம்பளம் மாறுபடும். இளநிலைப் படிப்பை முடித்த ஒருவர் பணியில் சேர்ந்ததும் மாதம் ரூ.8,000 பெறலாம் மற்றும் முதுநிலைப் படிப்பு முடித்த ஒருவர் பணியில் சேர்ந்ததும், மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை பெறலாம்.

சவால்கள்

சுற்றுச்சூழல் அறிவியல் என்பது data analysis dimension -ஐ உள்ளடக்கியது. நீங்கள் பல்வேறான பணி நிலைகளில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதால், உங்களின் மனம் மற்றும் அறிவை பரந்த நிலையில் அமைத்துக் கொள்ளவும். மேலும், தொழில்நுட்ப அறிவு இருப்பதும் முக்கியம். அப்போதுதான், ஏதேனும் சிக்கல் எழுந்தால், அதற்கு உடனடியாக தீர்வுகாண இயலும். ஆனால், ஒன்றை மட்டும் மறத்தல்கூடாது. இந்த பணியானது, அதிக கவனமும், அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும் கொண்டது என்பதுதான் அது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us