நாலெட்ஜ் பிராசஸ் அவுட்சோர்சிங் என்றால் என்ன? இத்துறை வாய்ப்பு பற்றி கூறவும். | Kalvimalar - News

நாலெட்ஜ் பிராசஸ் அவுட்சோர்சிங் என்றால் என்ன? இத்துறை வாய்ப்பு பற்றி கூறவும்.நவம்பர் 09,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

 

இன்று பி.பி.ஓ. எனப்படும் பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்சிங் பற்றி அறியாதவர் மிகச் சிலரே என்பதைப் பார்க்கிறோம். இத்துறை, இந்தியாவில் குறிப்பாக மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணிகளை அவுட் சோர்சிங் செய்யும் அடிப்படை அம்சம் கொண்ட பி.பி.ஓ., துறையின் பரிமாண வளர்ச்சியில் தற்போதைய கட்டங்களில் ஒன்று நாலெட்ஜ் பிராசஸ் அவுட்சோர்சிங் என்னும் கே.பி.ஓ., ஆகும்.

கே.பி.ஓ., துறையும் பி.பி.ஓ.,வை ஒத்தது தான் என்ற போதும் கே.பி.ஓ.,வில் ஒருவர் சார்ந்திருக்கும் துறை தொடர்பான (டொமைன் நாலெட்ஜ்) ஆழ்ந்த அறிவு கூடுதல் தேவையாக உள்ளது. கே.பி.ஓ., என்பதை திறமை, துறை சார்ந்த அறிவு, துறை அனுபவத்தாலான கூடுதல் மதிப்பு கொண்ட அவுட்சோர்சிங் துறை என வரையறுக்கலாம்.

கே.பி.ஓ., துறையின் துறை சார்ந்த அறிவு மிக அதிக அளவு தேவைப்படுவதால் இத்துறை B.P.O., Research Process Outsourcing, Analysis Proves Outsourcing என்னும் 3 துறைகளின் சங்கமமாக விளங்குகிறது. பி.பி.ஓ.,வில் அளவு, எண்ணிக்கை, திறமை ஆகிய 3 அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் நிலையில், கே.பி.ஓவில் இணைவதற்கு ஆழ்ந்த அறிவு, அனுபவம், முடிவெடுக்கும் திறமை என்னும் திறமைகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன.

இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் செய்யப்பட்ட பல்வேறு பணிகளின் வெற்றிகரமான செயல்பாட்டின் காரணமாக, திறமை அடிப்படையிலான பணிகளையும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அவுட்சோர்சிங் செய்யத் துடித்ததன் விளைவாக இத் துறை மலர்ந்துள்ளது. பி.பி.ஓ. துறை குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் அவுட்சோர்சிங் செய்யப்பட்ட நிலையில், கே.பி.ஓவின் எதிர்காலம் விரிவடைந்து கொண்டே போவதாக இருக்கிறது.

வெறும் ஐ.டி., ஐ.டி.இ.எஸ். என்னும் தொன்று தொட்ட அவுட்சோர்சிங் பணிகளைத் தாண்டி, கே.பி.ஓ. துறையானது பின்வரும் துறைகளில் செயல்படுகிறது.

* லீகல் பிராசஸ்
* இன்டலக்சுவல் பிராபர்டி மற்றும் பேடண்ட் தொடர்பான சேவைகள்
* பிசினஸ் ரிசர்ச் மற்றும் அனலிசிஸ்
* வெப் டெவலப்மெண்ட் அப்ளிகேஷன்ஸ்
* CAD / CAM அப்ளிகேஷன்ஸ்
* லீகல் ரிசர்ச்
* கிளினிகல் ரிசர்ச்
* பப்ளிஷிங்
* மார்க்கெட் ரிசர்ச்
வளர்ச்சிக்கான எண்ணற்ற கூறுகளைக் கொண்டுள்ள கே.பி.ஓ. துறையில் இணைய நம் இளைஞர்கள் பலரும் விரும்புவதில் ஆச்சரியமில்லை.
 
அபரிமிதமான அளவில் பல்வேறு துறைகளில் இந்தியாவில் திறனாளர்கள் இருப்பதன் காரணமாக ரிசர்ச், எழுத்துப் பணி, கன்டென்ட் மேனேஜ்மென்ட், டேட்டா அனலிசிஸ், அனிமேஷன் மற்றும் டிசைன், காப்புரிமை ஆராய்ச்சி, பார்மாசூடிக்கல்ஸ், பயோடெக்னாலஜி, நிதிச் சேவை, தொழில் நுட்ப ஆய்வு, கம்ப்யூட்டர் ஆடட் சிமுலேஷன், இன்ஜினியரிங் டிசைன், மருத்துவ ஆலோசனை, ஆய்வு மற்றும் சிகிச்சைப் பிரிவுகளிலும் நமது திறமைகள் பல்வேறு வெளிநாடுகளுக்கும் அவுட்சோர்சிங் செய்யப்படவுள்ளன. வரும் 2010க்குள் இந்தியாவில் இரண்டரை லட்சம் பேர் இத் துறையில் பணி புரிவர் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் இத்துறை 58 ஆயிரத்து 800 கோடி ரூபாய் புரளும் துறையாக விளங்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

கே.பி.ஓ., துறையில் இந்தியாவுக்கென்றே பிரத்யேகமாக இருக்கும் சிறப்பம்சங்களான குறைந்த செலவு, தரம் வாய்ந்த பணியாளர்கள், இலகுத் தன்மை கொண்ட பணி நேரம், அறிவுத் திறன் மேம்பாடு போன்ற அம்சங்கள் இத் துறையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.
இத் துறையில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், சார்ட்டர்ட் அக்கவுண்டன்டுகள், ஆர்க்கிடெக்டுகள் போன்றவர்களும் இணைவது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

பட்டப்படிப்பு முடித்த அனைவருமே இதற்குச் செல்லலாம். ஒரு குறிப்பிட்ட கே.பி.ஓ., டொமைன் திறன் பெற்றவரே பொதுவாக பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். உதாரணமாக அனிமேஷன் பிரிவில் இணைய சிறந்த கம்ப்யூட்டர் திறன்களும் கன்டென்ட் மேனேஜ்மென்ட் பிரிவில் இணைய சிறப்பான எழுத்துத் திறனும் ஆன்லைன் மீடியா பற்றிய திறமைகளும் தேவைப்படுகின்றன.

இப்பணிகளுக்கு குறிப்பிட்ட பணி நேரம் கிடையாது. சில நேரங்களில் வெளிநாட்டு பங்குதாரர் நிறுவனங்களின் தேவைக் கேற்ப நேரம் காலம் பார்க்காது பணி புரிய வேண்டும். எனவே நேரத்தைப் பிரச்னையாக நினைக்காத நபர்களே இதற்கு பொருத்தமானவர்கள். மேலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிகளை முடிக்கும் திறமையும் இலக்குகளை சரியாக நிர்ணயித்து நிறைவேற்றும் திறமையும் வேண்டும்.

கவர்ச்சிகரமான ஊதியம்: இத்துறையில் கை நிறைய சம்பாதிக்க முடிவதுடன் உலகத் தரம் வாய்ந்த சிறப்பான பயிற்சிகளையும் பெற முடியும். கேந்திரப் பணி தொடர்புடைய துறை என்பதால் நல்ல மதிப்பும் மரியாதையும் உலகளாவிய அங்கீகாரமும் இத்துறையில் பணி புரிபவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us