சண்டையிடும் பெற்றோர் கவனிக்க சில விஷயங்கள் | Kalvimalar - News

சண்டையிடும் பெற்றோர் கவனிக்க சில விஷயங்கள்

எழுத்தின் அளவு :

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி சதா சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோரின் குழந்தைகள் பள்ளிகளில் அவர்களுக்குத்தரப்பட்ட செயல்களை செய்வதில்

சிரமப்படுவதாக முடிவு வெளியாகியுள்ளது. பெற்றோருக்கு இடையே அடிக்கடி நிகழும் சண்டைகளின் காரணமாக இக்குழந்தைகள் சக மாணவர்களுடனும், பிறருடனும் விட்டுக்கொடுத்து நடக்கும் தன்மையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

216 குழந்தைகளை வைத்து கிட்டத்தட்ட மூன்றாண்டு காலத்திற்கு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. பெற்றோரின் நடத்தை மற்றும் சச்சரவு பற்றிய தகவல்களை குழந்தைகள் வாயிலாகச் சேகரிக்கும் முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டன. இதனை வைத்து எதிர்மறை எண்ணங் களும், கவலைகளும் குழந்தைகளின் மனதை எப்படி ஆழமாகப் பாதிக் கின்றன என்ற ரீதியில் ஆய்வு செய்யப்பட்டது.

இப்படி சச்சரவுகளில் சிக்கிய குழந்தைகளின் நடத்தை, சகமாணவர்களுடன் அவர்களின் உறவு ஆகியவற்றை வைத்து பள்ளியுடன் அவர்களின் ஒத்துப்போகும் தன்மையைப் பற்றிய விபரங்கள் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டது.

குறிப்பாக சக மாணவர்களுடன் ஒத்துழைப்பு, ஆசிரியரின் அறிவுரையை மதித்தல், வகுப்பறையின் பொருட்களை குறைவாக உபயோகித்தல் போன்ற அம்சங்களில் குழந்தைகளின் அணுகுமுறையும் வெளிக்கொணரப்பட்டது.

இதே மாதிரியாக குழந்தைகளிடம் பெற்றோரும் கவனம் செலுத்த வகை செய்யும் விதத்தில் பெற்றோரின் அறிக்கை, கணினி உதவியுடன் குழந்தைகளிடம் அக்கறை காட்டும் படிவம் போன்றவையும் பெறப்ட்டது.

பெற்றோரின் வாழும் முறை குழந்தைகளிடம் எப்படி கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பது முதலிடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த அடிப்படையில், பெற்றோரின் சண்டைகளைப் பார்க்க நேரிட்ட குழந்தைகள் இவற்றிலிருந்து தப்பிக்கும் விதத்தில் எதிர்மறை எண்ணங்களை அதிகமாக வளர்த்துக்கொள்வது கண்டறியப்பட்டது.

பிரச்னைகள் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளின் நிலையை உணர்வது மற்றும் தகுந்த பயிற்சி மூலம் அவர்களுக்கு நம்பிக்கை அளித்த உயர்த்துவது என்பவை கிட்டத்தட்ட தற்போது ஒரு சமூகப்பிரச்னையாகவே மாறியுள்ளது. இவற்றைச் சரி செய்யும் விதத்தில் மாற்று முயற்சிகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us