ஜூன் 5ம் தேதி சட்ட நுழைவுத்தேர்வு! | Kalvimalar - News

ஜூன் 5ம் தேதி சட்ட நுழைவுத்தேர்வு!

எழுத்தின் அளவு :

டெல்லி பல்கலைக்கழகம் வழங்கும் எல்.எல்.பி., எல்.எல்.எம்., ஆகிய சட்ட படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்ற இளநிலை அல்லது முதுநிலை பட்டதாரிகள் எல்.எல்.பி., நுழைவுத் தேர்வை எழுதலாம். இத்தேர்வு ஜூன் 5ம் தேதி நடக்க உள்ளது. எல்.எல்.எம்., படிப்பில் சேர குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் எல்.எல்.பி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எல்.எல்.எம்., படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 22ம் தேதி நடக்க உள்ளது. நுழைவுத்தேர்வுகள் டெல்லியில் நடைபெறும்.

பல்கலைக்கழகத்தின் வெப்சைட்டில் (www.du.ac.in) இருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய கட்டணத்துடன் The convenor, Admission Committee, Faculty of Law, University of Delhi-110 007 என்ற முகவரிக்கு வரும் ஜூன் 2ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us