பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ்., படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்? | Kalvimalar - News

பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிக்கவிருக்கிறேன். வெளிநாட்டில் எம்.எஸ்., படிக்க விரும்புகிறேன். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகியவற்றில் எங்கு படித்தால் எனக்கு வளமான எதிர்காலம் அமையும்?டிசம்பர் 22,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்க மற்றும் கனடா கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்., படிப்பானது 2 ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் ஒரு ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. உங்களது குடும்பச் சூழல், நிதி ஆதாரம் போன்றவற்றின் அடிப்படையில் 2 ஆண்டு படிப்பா அல்லது ஒரு ஆண்டு படிப்பா என்பதை தீர்மானிக்கலாம்.


எனினும் அமெரிக்க எம்.எஸ்., படிப்பு இறுக்கமான விதிகளைக் கொண்டிருக்கவில்லை. மேலும் இங்கு எம்.எஸ்., முடித்தபின் ஒரு ஆண்டு களப் பணி கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் அமெரிக்க எம்.எஸ்.,படிப்பு சற்றே உயர்வாக கருதப்படுகிறது. இன்டர்நெட் தளங்களில் மேலும் தேவைப்படும் விபரங்களைப் பெற்று முடிவு செய்து கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us