பெற்றோர் கவனத்திற்கு | Kalvimalar - News

பெற்றோர் கவனத்திற்கு

எழுத்தின் அளவு :

பெற்றோர்களே, குழந்தையின் விருப்பப்படி செயல்பட உதவுங்கள். உங்களுடைய கடந்த கால ஆசை, தங்களால் செய்ய முடியாத ஒன்றை குழந்தைகள் மூலம் நிறைவேற்ற முயற்சிப்பது, குழந்தைகளின் செயல்பாட்டை, தங்களது செயல்பாட்டோடு ஒப்பிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள்.

ஒருவரது மூளை, தொடர்ந்து எட்டு மணி நேரம் மட்டுமே கருத்துக்களை உணர்ந்து உறிஞ்சும் திறன் பெற்றுள்ளது. இதை புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து குழந்தைகளை படிக்க கட்டாயப்படுத்துவது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். ஆசிரியர்கள், தேர்வு நேரத்தில் மாணவர்களை, பொதுத் தேர்வுக்கான பயிற்சிகள், செய்முறைப் பயிற்சிகள், சிறப்பு வகுப்புகளுக்கு உட்படுத்துவதால், அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆட்படுகின்றனர்.

இதைத் தடுக்க ஆசிரியர்கள், மாணவர்களின் திறன், செயல்பாடு, அவர்களின் மனப் பிரச்சனைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு, சத்தான உணவுகள், பாதுகாப்பு, பெற்றோர்களிடமிருந்து ஊக்கம், ஆதரவு போன்றவை முக்கியம். யோகா, தியானம், உடற்பயிற்சி, விளையாட்டு, ஓய்வு ஆகியவை மூலம் புத்துணர்வு பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us