கிரிமினாலஜி மற்றும் பாரன்சிக் துறையில் முதுநிலைப் படிப்பு | Kalvimalar - News

கிரிமினாலஜி மற்றும் பாரன்சிக் துறையில் முதுநிலைப் படிப்பு

எழுத்தின் அளவு :

மங்களூர்: நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய உலகில், குற்றங்களும் நவீனமாக மாறிவிட்டன. எனவே அவற்றை புலனாய்வு செய்வது சவாலான ஒரு விஷயமாக மாறிவிட்டது. எனவே புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி நவீன குற்றங்களை துப்பறியும் விதமாக, பாரம்பரிய புலனாய்வு முறை மற்றும் நவீன முறைகளில் தேர்ச்சிபெற்ற நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே இத்தகைய நிபுணர்களை உருவாக்கும் விதமாக, ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க், ரோஷினி நிலையம் என்ற தன்னாட்சி கல்லூரியானது(மங்களூர் பல்கலையுடன் இணைக்கப்பட்டது), அறிவியல் பிரிவில், எம்.எஸ்சி. கிரிமினாலஜி மற்றும் பாரன்சிக் சயின்ஸ் என்ற முதுநிலைப் படிப்பை 2011-12 கல்வியாண்டில் தொடங்கியுள்ளது. மங்களூர் பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளில், முதன்முறையாக இந்தப் படிப்பை தொடங்கியிருப்பது இந்தக் கல்லூரிதான். இன்றைய நிலையில் இணையதளம் மற்றும் செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பி நடைபெறும் மோசடிகளை தடுக்கும் அம்சங்கள் இந்தப் படிப்பில் இடம்பெற்றுள்ளன. பள்ளிப் படிப்பில் அறிவியல் படித்து, ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் படித்திருந்தால் இப்படிப்பில் சேரலாம். உளவியல், கிரிமினாலஜி போன்றவைப் படித்த எல்.எல்.பி. பட்டதாரிகள், பி.ஏ, பி.எஸ்சி படிப்புகளில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்தவர்கள் மற்றும் பி.எஸ்சி பட்டதாரிகளும் இப்படிப்பில் சேரலாம். கர்நாடக மாநிலத்திலேயே இந்தப் பிரிவில், முதுநிலைப் படிப்பை தொடங்கியுள்ள மூன்றாவது கல்வி நிறுவனம் இதுவாகும். இந்தப் படிப்பில் இந்தாண்டு சேர ஜுலை 30 கடைசி தேதி என்றாலும், இதைப் பற்றிய அறிமுகம் இருக்கையில், அடுத்த வருடம் இதை விரும்பியவர்கள் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us