இந்தியாவில் காமர்ஸ் படிப்பை பல கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. எனினும் எனது மகனை இந்தியாவின் சிறந்த காமர்ஸ் கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்க்க விரும்புகிறேன். எங்கு சேர்க்கலாம்? இவற்றின் பட்டியலைத் தரலாமா? | Kalvimalar - News

இந்தியாவில் காமர்ஸ் படிப்பை பல கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றன. எனினும் எனது மகனை இந்தியாவின் சிறந்த காமர்ஸ் கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்க்க விரும்புகிறேன். எங்கு சேர்க்கலாம்? இவற்றின் பட்டியலைத் தரலாமா?ஜனவரி 26,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் காமர்ஸ் படிப்பும் பிற படிப்புகளோடு போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து வருகிறது. இதை சிறப்பான கல்வி நிறுவனம் ஒன்றில் சிறப்பாகப் படித்து முடிப்பவருக்கு கேம்பஸ் இன்டர்வியூ போன்றவை மூலமாக உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்தியாவின் டாப் 10 காமர்ஸ் கல்வி நிறுவனங்கள் இவை தான். இவற்றின் இன்டர்நெட் தள முகவரிகளும் அவை இல்லாத இடங்களில் பிற விபரங்களும் தரப்பட்டுள்ளன. சேர்க்கை முறை, மதிப்பெண் தேவை போன்ற அனைத்து விபரங்களையும் இதில் பார்த்துக் கொள்ளலாம். * ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ், டில்லி (www.srcc.edu) * செயின்ட் சேவியர்ஸ் காலேஜ், மும்பை (www.xaviers.edu) * லயோலா காலேஜ், சென்னை (www.loyolacollege.edu) * செயின்ட் சேவியர்ஸ் காலேஜ், கோல்கட்டா (www.xccal.edu) * நர்ஸி மோஞ்சி காலேஜ், விலே பார்லே, மும்பை தொலைபேசி 022 26136059 * சிம்பயாசிஸ், புனே (www.siec.ac.in) * எல்.எஸ்.ஆர். காலேஜ் பார் உமன், டில்லி (www.isrcollege.org) * செயின்ட் ஜோசப் காலேஜ், பெங்களூரு (www.sjc.ac.in) * பிரசிடன்ஸி காலேஜ், சென்னை (www.presidencychennai.com) * பி.எம். காலேஜ், புனே (www.bmcc.ac.in)

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us