மனித வளத் துறையில் எம்.பி.ஏ., படிக்கும் எனது மகளுக்கு எது மாதிரியான வேலைகள் கிடைக்கலாம்? | Kalvimalar - News

மனித வளத் துறையில் எம்.பி.ஏ., படிக்கும் எனது மகளுக்கு எது மாதிரியான வேலைகள் கிடைக்கலாம்?மார்ச் 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

 

உற்பத்தி, சேவை மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்களில் உங்களது மகளுக்கேற்ற வேலைகள் உள்ளன. உதாரணமாக எச்.எல்.எல்., பெப்சி, நெஸ்லே, ரான்பாக்சி, டாபர் போன்ற நிறுவனங்களில் மனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து சிறப்பான திறன்களைக் கொண்டவர்கள் நல்ல பணிகளில் உள்ளனர். ஹெவிட் அசோஷியேட்ஸ், மெர்ஸர், எர்னஸ்ட் அண்டு யங் போன்ற நிறுவனங்களில் மிக உயரிய பதவிகளில் இப் படிப்பை முடித்திருப்பவர்கள் உள்ளனர்.

உங்களது மகள் எம்.பி.ஏ., படிப்பை எந்தக் கல்வி நிறுவனத்தில் படித்தாலும் அப் படிப்பை மிக நன்றாகப் படிக்கச் சொல்லி ஞாபகப்படுத்திக் கொண்டே இருங்கள். மேலும் அவரது அடிப்படை பொது அறிவு, பகுத்தாராயும் திறன் போன்றவற்றை இப்போதிருந்தே வளர்த்துக் கொள்வதும் முக்கியம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us