பொறியியல் கல்லூரியை தேர்வுசெய்தல் - மாணவர்களை ஈர்க்கும் காரணிகள் | Kalvimalar - News

பொறியியல் கல்லூரியை தேர்வுசெய்தல் - மாணவர்களை ஈர்க்கும் காரணிகள்

எழுத்தின் அளவு :

பலவிதமான பொறியியல் நுழைவுத்தேர்வை எழுதிய பிறகு, எந்தக் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்குமோ? என்று மாணவர்கள் கவலைப்பட தொடங்கி விடுகிறார்கள்.

சிறப்பான முன்னணி கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதே, ஏறக்குறைய அனைவரின் விருப்பமாக இருந்தாலும், பலருக்கும் அந்த ஆசை நிறைவேறுவதில்லை. ஏனெனில், அவர்கள் பெற வேண்டிய மதிப்பெண்களின் தேவை மிக அதிகம். இந்திய ஐ.ஐ.டி.,களில் இருக்கும் 10 ஆயிரம் இடங்களுக்காக, 5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், ஜே.இ.இ., தேர்வை எழுதுகிறார்கள். எனவே, அவர்களில், வெறும் 10 ஆயிரம் பேர்தான் தங்களின் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

IIT -களில் இடம் கிடைக்காத மாணவர்கள், அதற்கடுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி.,கள், ஐ.ஐ.ஐ.டி.,கள் போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அமிட்டி ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் மற்றும் Sharda பல்கலைக்கழகம் உள்ளிட்ட தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இடம்பிடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த ஆண்டிலிருந்து IITJEE தேர்வானது, AIEEE தேர்வுடன் சேர்க்கப்பட்டிருப்பதால், போட்டியானது இன்னும் கடினமாக மாறியுள்ளது. மேற்கூறிய பிரதான கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் போட்டிபோட்டுக் கொண்ட சேர துடிப்பதற்கு, ரேங்க், அவர்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவு மற்றும் பெரிய வேலைவாய்ப்புகள் போன்றவையே பெரிய காரணங்களாக இருந்தாலும், அவைதவிர, இதர பல காரணங்களும் உள்ளன.

தங்களின் சொந்த ஊரில் இருப்பது, தாங்கள் வசிக்கும் பகுதியில் இருப்பது, அரசு கல்வி நிறுவனமாக இருப்பது, பிறர் சொன்ன காரணம், சிறந்த விடுதி வசதிகள், Extra curricular activities தொடர்பாக கல்வி நிறுவனம் காட்டும் அக்கறை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அமைந்த ஊரின் சிறப்பு, குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் படிக்கும் பலதரப்பட்ட மாணவர்கள், தன்னுடைய குடும்பத்தில் யாரேனும் ஒருவர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்தவராக இருப்பது உள்ளிட்ட பல்வேறான காரணங்கள், ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தை நோக்கி மாணவர்களை ஈர்க்கின்றன.

ஆனால், பெரும்பாலான மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனத்தில், எந்தளவு கட்டணம் வசூலிக்கிறார்கள், அதை தன் குடும்பத்தால் சமாளிக்க முடியுமா? என்பதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை. அது, பெற்றோர்கள் மட்டுமே யோசிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான பெற்றோர்களும், தங்கள் சக்திக்கு மீறியதாக இருந்தாலும், கடன்பட்டாவது குழந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us