ஐ.ஏ.டி.ஏ. எனப்படும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு வழங்கிடும் சான்றிதழ் படிப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

ஐ.ஏ.டி.ஏ. எனப்படும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு வழங்கிடும் சான்றிதழ் படிப்புகள் பற்றிக் கூறவும்.ஜூலை 19,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

இவை உலகெங்குமுள்ள விமான நிறுவனங்களாலும் டிராவல் அமைப்புகளாலும் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஐ.ஏ.டி.ஏ. என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும். இதன் தலைமையகம் கனடாவிலுள்ள மான்ட்ரீலில் உள்ளது.

விமானங்களை இயக்குவதற்கான தரக்கட்டுப்பாடுகளையும் பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகளையும் இந்த நிறுவனமே வரை யறுக்கிறது. உலகளவில் இயங்கும் 230 விமான நிறுவனங்களை இது உள்ளடக்கியிருப்பதுடன் 93% சர்வதேச விமான நிறுவனங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் தலையாய பணிகளுள் ஒன்றாக விமானப் பயிற்சி விளங்குகிறது.
இதன் படிப்புகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன் விமான நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் பல்வேறு நிலைகளில் பணி புரிபவர்களையும் பல்வேறு பட்டப்படிப்புகள் மூலமாக பயிற்றுவித்து வருகிறது.

விமானப் பயிற்சியைப் பொறுத்தமட்டில் ஏர்லைன்ஸ் ஆபரேஷன்ஸ், சேப்டி, மார்க் கெட்டிங், ஸ்டிராடஜிக் மேனேஜ் மென்ட், பியூவல் எபீஷியன்சி, அக்கவுண்டிங், பயணக்கட்டணம், டிக்கெட்டிங் போன்ற பல்வேறு துறைகள் உள்ளன.

ஐ.ஏ.டி.ஏ. தந்திடும் பல்வேறு படிப்புகள் பற்றிய முழு விபரங்களை www.iata.org/training /courses என்னும் இணைய தளத்தில் பார்க்கலாம். இதன் படிப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம்.
* ஏர்லைன் கேபின் க்ரூ டிரெய்னிங்
* ஏர்லைன் கால்சென்டர் டிரெய்னிங்
* ஏர்லைன் கஸ்டமர் சர்விஸ்
* ஏர்போர்ட் ஆபரேஷன்ஸ்
* கார்கோ மார்க்கெட்டிங்
* டிராவல் அண்ட் டூரிசம் டிரெய்னிங் புரொகிராம்
* ஏர் கார்கோ ரேட்டிங்
* கார்கோ இன்டராக்டரி கோர்ஸ்
* டேஞ்சரஸ் குட்ஸ் ரெகுலேஷன்ஸ்
* இன்டர்நேஷனல் கார்கோ ஏஜன்ட்ஸ் டிரெய்னிங்
* டிப்ளமோ இன் அட்வான்ஸ்ட் ஏர் டிராபிக் கன்ட்ரோல்
* டிப்ளமோ இன் சேப்டி மேனேஜ்மென்ட் பார் ஏர்லைன்ஸ்

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us