எழுத்தின் அளவு :

"மாற்றுத்திறனாளிகள் மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது" என, கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 500 ரூபாய், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 1,500 ரூபாய், ஒன்பது முதல் ப்ளஸ் 2 வரை 2,000 ரூபாய், பாலிடெக்னிக், இளங்கலை பட்டம் படிப்பவர்களுக்கு 3,000 ரூபாய், முதுகலை பட்டம் படிப்பவர்களுக்கு 3,700 ரூபாய் வழங்கப்படும்.

ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிப்பவர்கள், முந்தைய கல்வியாண்டின் இறுதி தேர்வில் 40 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும். தேர்வில் தவறி இருந்தால் கல்வி உதவித்தொகை பெற இயலாது. எனவே, தகுதியுள்ள மாணவ, மாணவியர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பம் பெறலாம்.

அல்லது, அந்தந்த வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டும் திட்டத்தை செயல்படுத்தும், தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெறலாம். வேறு துறைகளில் கல்வி உதவித்தொகை பெற்று வந்தால், இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ஈரோடு - 11 என்ற, முகவரிக்கு, வந்தடைய வேண்டும். தகுதியான மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

Scholarship :  மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us