எழுத்தின் அளவு :

மெக்ஸிகோ அரசாங்கமானது, வேளாண்மை, பயோ-டெக்னாலஜி, .டி(IT) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய 4 துறைகளில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகைகளை வழங்குகிறது. அந்த உதவித்தொகைகள் பற்றிய சுருக்கமான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உதவித்தொகை: மெக்ஸிகோ நாட்டிலுள்ள எந்த உயர்கல்வி நிறுவனத்திலும், மேற்கூறிய 4 துறைகள் ஏதேனும் ஒன்றில் முதுநிலை அல்லது Ph.D படிக்க இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

எத்தனை உதவித்தொகைகள்: இந்த வருடம் மொத்தம் 5 உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

வாய்ப்பு: வேளாண்மை, பயோ-டெக்னாலஜி, .டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய 4 துறைகளைத் தவிர, வேறு துறைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஸ்பானிஷ் மொழி அவசியமா: பல்கலைக்கழகம் அல்லது மொழி கற்பித்தல் மையம் ஆகியவற்றால் வழங்கப்படும், ஸ்பானிஷ் மொழி அறிவுக்கான தகுதிச் சான்றிதழ், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

தகுதி நிலைகள்: இளநிலைப் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 8 GPA(Grade Point Average) வைத்திருப்பவர்கள் மட்டுமே, முறையே முதுநிலை மற்றும் Ph.D படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். M.Phil படிப்பின் காலஅளவு பற்றி பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு கடிதம் பெற்று அதை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவில்லை எனில், அது ஒரு வருட பட்டப்படிப்பாக கருதப்படும். ஏற்கனவே வெளிநாட்டில் இருந்தவர்கள், தங்களின் கடைசி 2 வருடங்களை இந்தியாவில் கழித்திருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: உங்களுடைய கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான இதர ஆவணங்களின் நகல்களை, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், டெல்லியிலுள்ள, உயர்கல்வித்துறை Section அதிகாரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். அதேசமயம் www.education.nic.in என்ற இணையதளம் மூலமாக உங்களின் விண்ணப்பத்தை ஆன்லைனிலும் அனுப்பலாம். மேலும், பணிபுரியும் நபர்கள், தடையில்லா சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வுசெய்யும் முறை: உதவித்தொகைக்கான மாணவர்களை தேர்வுசெய்யும் குழுவானது, சம்பந்தப்பட்டவரது கல்வி சாதனையை ஆய்வுசெய்யும். மேலும், உத்தேசித்த துறையானது, உங்களுடைய படிப்பிற்கும், பணி சாதனைகளுக்கும், உங்களது நாட்டின் முன்னேற்றத்திற்கும் தொடர்புடையதா? என்பதையும் பார்க்கும்.

உதவித்தொகை விபரம்: மெக்ஸிகன் பல்கலைக்கழகத்தால் வசூலிக்கப்படும் டியூஷன் கட்டணம், முதுநிலைப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கு மாதாமாதம் ரூ.26,000 மற்றும் Ph.D மேற்கொள்பவர்களுக்கு மாதாமாதம் ரூ.33,000 வழங்கப்படும். இதுதவிர, மெடிக்கல் இன்சூரன்ஸ், போய் வருவதற்கான விமான கட்டணம் ஆகியவையும் வழங்கப்படும். அதேசமயம், பண பரிமாற்ற கட்டணம், ஆய்வு கட்டுரைகளை அச்சிடுதல், பட்டம் பெறுவதற்கான நடைமுறை செலவுகள், வெளிநாட்டினர், மெக்ஸிகோவின் தேசிய பதிவகத்தில் பதிவதற்கான கட்டணம் போன்றவைகளை சம்பந்தப்பட்ட மாணவர்கள்தான் ஏற்க வேண்டும்.

இந்த உதவித்தொகை நடைமுறைகளைப் பற்றிய முழு விபரங்களுக்கு www.becas.sre.gob.mx என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Scholarship :  மெக்ஸிகோவில் மேல்படிப்பிற்கான உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us