எழுத்தின் அளவு :

பிஎச்.டி. பயிலும் மாணவர்களுக்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி -மும்பை மற்றும் மெல்போர்னில் உள்ள மோனஷ் பல்கலையும் இணைந்து உதவித் தொகை வழங்குகிறது.

இந்த கல்வியாண்டில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் பிஎச்.டி. பயிலும் மாணவர்களை தேர்வு செய்து இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த உதவித் தொகையின் கீழ், ஆராய்ச்சிப் பணிக்கு ஏற்ற நிதியுதவி, ஐஐடி-பி மற்றும் மோனஷ் பல்கலையின் இரண்டு பிஎச்.டி. பட்டங்களை ஒன்றாகப் பெறலாம்.

ஐஐடி-பி அல்லது மோனஷ் பல்கலையின் பேராசிரியரை மேற்பார்வையாளராகப் பெறலாம்.

உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வசதி, மோனஷ் பல்கலைக்குச் செல்லும் சிறப்பு வாய்ப்பு ஆகியவை வழங்கப்படும்.

பொறியியல் அல்லது மருத்துவத்தில் முதுநிலை பயின்றவர்களுக்கும், ஐஐடி, என்ஐடி, பிட்ஸ் போன்ற கல்வி நிலையங்களில் முதுநிலை அல்லது இளநிலை படிப்பை முடித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் www.iitbmonash.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்பலாம்.

Scholarship :  பிஎச்.டி. மாணவர்களுக்கு உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us