எழுத்தின் அளவு :

அமெரிக்கா - இந்திய கல்வி அறக்கட்டளை (USIEF) சார்பில் பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஃபுல்பிரைட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம் Fullbrght-Nehru-CII Fellowships for Leadership in Management at US என்ற பெயரில் மேலாண்மை பயில உதவித்தொகை வழங்குகிறது. பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள கார்னேஜ் மெலன் பல்கலைக்கழகத்தின் டெப்பர் ஸ்கூல் ஆப் பிசினசில் பயில வேண்டும்.

உதவித்தொகை பெறும் மாணவருக்கு ஒ-1 விசா, விமானக்கட்டணம், முழு கல்விக்கட்டணம், பராமரிப்புக் கட்டணம், தகவமைத்துக் கொள்வதற்கான உதவித்தொகை, விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு என அரசாங்க வழிகாட்டுதலின் படி பெரும்பான்மைச் செலவினங்களை உள்ளடக்கியதாக, இவ்வுதவித்தொகை அமையும்.

பட்டம் பெற்றிருப்பதுடன், ஐந்தாண்டு நிர்வாகப்பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டம். 45 அல்லது அதற்கு உட்பட்ட வயதுடையவராக, ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் போது இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் வசிப்பவராகவோ, கிரீன்கார்டு பெற்றவராகவே அதற்கு விண்ணப்பித்தவராகவோ இருக்கக்கூடாது.

இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.usief.org.in/scripts/ForIndianNationalsForProfessinalsFullbright-Nehru-CIIFellowshipsinManagement.aspx  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Scholarship :  மேலாண்மைக் கல்விக்கான புல்பிரைட் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us