கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர கல்வித் தகுதி

எழுத்தின் அளவு :

Print

தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள இளநிலைப் பட்டபடிப்புகளும் அவற்றில் சேர்வதற்கான கல்வித் தகுதிகளும்:

1.பி.வி.எஸ்.சி. ஏ.எச்., / பி.எப்.எஸ்சி.,

பொதுப்பிரிவினர்:
1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும்     விலங்கியலில் இணைந்து 60 சதவீத மதிப்பெண்கள்.

2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 140 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
 
பிற்பட்டோர்:

1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியலில் இணைந்து 60 சதவீத மதிப்பெண்கள்.

2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 130 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:
1.உயிரியலில் 55 சதவீத மதிப்பெண் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியலில் இணைந்து 55 சதவீத மதிப்பெண்கள்.
 
2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 120 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்:
பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
பி.டெக்., உணவு பதனிடும் தொழில்நுட்பம்

பொதுப்பிரிவினர்:
1.கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண்.

2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
 
3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 140 மதிப்பெண்கள் இருக்கவேண்டும்.
 
பிற்பட்டோர்:
1.கணிதம் 60 சதவீத மதிப்பெண்.

2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 130 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:
1.கணிதம் 55 சதவீத மதிப்பெண்.

2.இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
 
3.இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 120 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்:
பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
பிளஸ் 2வில் தொழிற்பயிற்சி (வொகேஷனல்) முடித்த மாணவர்கள் கல்வித்தகுதி: பி.வி.எஸ்சி.,  ஏ.எச்.,/ பி.எப்.எஸ்சி.,

பொதுப்பிரிவினர்:
1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண்.

2.செயல்முறை தேர்வுகளையும் சேர்த்து கோழிவளர்ப்பு/பால்வளம் அல்லது மீன்வளம் 60 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 140 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
 
பிற்பட்டோர்:
1.உயிரியலில் 60 சதவீத மதிப்பெண்.

2.செயல்முறை தேர்வுகளையும் சேர்த்து கோழிவளர்ப்பு/பால்வளம் அல்லது மீன்வளம் 60சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 130 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
 
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்:
1.உயிரியலில் 55 சதவீத மதிப்பெண்.

2.செயல்முறை தேர்வுகளையும் சேர்த்து கோழிவளர்ப்பு/பால்வளம் அல்லது மீன்வளம் 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

3. இப்பாடங்களின் ஒட்டுமொத்த சராசரி (அக்ரிகேட்) 200க்கு 120 மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us