லாஜிஸ்டிக்ஸ் என்பது இன்று மிக வேகமாக வளரும் துறை என்பதை அறிவீர்கள். பன்னாட்டு எல்லைகளைத் தாண்டி சிறப்பான பணி வாய்ப்புகளைத் தரும் இத் துறைக்குத் தேவைப்படும் திறன்கள் பகுத்தாராயும் திறன், தகவல் தொடர்புத்திறன், கம்ப்யூட்டர் திறன் மற்றும் எளிதாக யாருடனும் பழகும் திறன் ஆகியவை தான்.
உற்பத்தி நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், போக்குவரத்துத் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் லாஜிஸ்டிக்ஸ் பணியிடங்கள் காத்திருக்கின்றன. லாஜிஸ்டிக்ஸ் துறையிலும் விற்பனை, மார்க்கெட்டிங், வேர்ஹவுசிங், பிளானிங் என எத்தனையோ பிரிவுகளில் வேலைகள் இருக்கின்றன.
உங்களது அடிப்படை குணம், திறன்கள், பலம் ஆகியவற்றை நன்றாக யோசித்து அலசி ஆய்வு செய்து லாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன பிரிவுக்கு நீங்கள் பொருந்துவீர்கள் என முடிவு செய்து அதற்கேற்ப உங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளவும்.