நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ரூர்க்கி

எழுத்தின் அளவு :

இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் என்.ஐ.டி., களில், ஒரிசா மாநிலத்தில் உள்ள ரூர்க்கி  என்.ஐ.டி., யும் ஒன்று. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய முக்கிய நோக்கம், தரமான கல்வியை வழங்குவதன் மூலம் சிறந்த இன்ஜினியர்கள் மற்றும் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்குவதாகும்.

மாணவர்களுக்கு புத்தக அறிவோடு, ஆராய்ச்சி மற்றும் இதர வசதிகளையும் அளித்து வருகிறது. இக்கல்வி நிறுவனம் 1955ம் ஆண்டு துவக்கப் பட்டது. தற்போது 262 எக்டேர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் அமைந்துள்ளது. சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்கள், நவீன தொழில்நுட்ப வசதிககள், ஆய்வகம், நூலகம் போன்ற வசதிகள் உள்ளன.

பாடப்பிரிவுகள்:
பல்வேறு இன்ஜினியரிங் துறைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வழங்குகிறது.
இளநிலை படிப்புகள் (4 வருடம்)
பி.டெக்., (பயோடெக் மற்றும் மெடிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (செராமிக் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (சிவில் இன்ஜினியரிங்)
பி.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
பி.டெக்., (மெட்டாலஜி இன்ஜினியரிங்)
பி.டெக்., (மைனிங் இன்ஜினியரிங்)
பி.டெக்., (பயோ டெக்னாலஜி இன்ஜினியரிங்)
பி.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் மற்றம் இன்ஸ்ட்ரூமென்டேசன் இன்ஜினியரிங்)

தேர்ந்தெடுக்கும் முறை: தேசிய அளவில் நடத்தப்படும் எ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் பி.டெக்., படிப்புக்கு தேர்வு செய்யப்படுவர்.

முதுநிலை படிப்புகள் (2 வருடம்)
எம்.டெக்., (பயோடெக் மற்றும் மெடிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (செராமிக் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (கெமிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (மெட்டலாஜிகல் மற்றும் மெட்டீரியல் இன்ஜினியரிங்)
எம்.டெக்., (மைனிங் இன்ஜினியரிங்)
எம்.எஸ்சி., (இயற்பியல்)
எம்.எஸ்சி., (வேதியியல்)
எம்.எஸ்சி., (கணிதம்)
எம்.சி.ஏ., (3 வருடம்)

தேர்ந்தெடுக்கும் முறை:
எம்.டெக்., படிப்புக்கு, பி.டெக்., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ., படிப்புக்கு கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், எம்.எஸ்சி., படிப்புக்கு இக்கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆராய்ச்சி படிப்புகள்:
இளநிலை பி.டெக்., படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களும், எம்.டெக்., படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களும் பெற்ற மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

வேலைவாய்ப்பு வசதிகள்:
இக்கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கென தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு படித்த மாணவர்கள் டி.சி.எஸ், விப்ரோ, இன்போசிஸ், எச்.சி.எல்., டிஸ்கோ, இந்துஸ்தான் மோட்டார்ஸ், ஹீரோ ஹோண்டா, எச்.ஏ.எல்., போன்ற முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். கடந்த 2009  2010 கல்வி ஆண்டில் 600 மாணவர்களும், 2008  2009 கல்வி ஆண்டில் 586 மாணவர்களும் வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு www.nitrkl.ac.in என்ற இணையதளத்தின் வெப்சைட்டை பார்க்கவும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us