நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அகர்தலா

எழுத்தின் அளவு :

இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய அளவிலான தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்று என்.ஐ.டி.ஏ.,(நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அகர்தலா). நம் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள மாநிலங்களின் பொருளாதாரத்தை சிறப்பான கல்வி அளிப்பதன் மூலம் முன்னேற்றுவது இக்கல்வி நிறுவனத்தின் நோக்கமாகும். 1965 ஆம் ஆண்டு திரிபுரா இன்ஜினியரிங் கல்லூரி என்ற பெயரில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய மூன்று துறைகளுடன் இக்கல்வி நிறுவனம் துவங்கப்பட்டது.

அக்காலகட்டத்தில் கோல்கட்டா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றிருந்தது. பிப்ரவரி 23, 2006ஆம் ஆண்டு இக்கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும். திரிபுரா மாநிலத்தின் அங்கீகாரத்துடன் திரிபுரா இன்ஜினியரிங் கல்லூரி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பெயர் பெற்றது.

இங்குள்ள படிப்புகள்:
* சிவில் இன்ஜினியரிங்: பி.டெக்.,சிவில் இன்ஜினியரிங், எம்.டெக்.,கட்டமைப்பு இன்ஜினியரிங் மற்றும் பி.எச்.டி., படிப்புகள் உள்ளன.
* கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்: பி.டெக்., மற்றும் எம்.டெக்.,பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மற்றும் எம்.சி.ஏ.,படிப்புகள் இத்துறையில் உள்ளன.
* எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்: பி.டெக்.,எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எம்.டெக்.,பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பி.எச்.டி.,படிப்புகள் உள்ளன.
* எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்: பி.டெக்., மற்றும் எம்.டெக்.,பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்புகள் இத்துறையில் உள்ளன.
* மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: பி.டெக்.,மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்.டெக்.,தெர்மல் சயின்ஸ் இன்ஜினியரிங் உள்ளன.
* புரொடக்ஷன் இன்ஜினியரிங்: பி.டெக்.,பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு இத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன.
* மனித இனம் மற்றும் சமூகம் சார்ந்த படிப்புகள்:எம்.பி.ஏ., மற்றும் பி.எச்.டி.,படிப்புகள் இத்துறையின் கீழ் வழங்கப்படுகின்றன.
* இயற்பியல்
* வேதியியல்
* கணிதம்

மாணவர்களுக்கான வசதிகள்
இக்கல்வி நிறுவனம் மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வளாகத்தில் பல வசதிகளை கொண்டுள்ளது. சிறப்பான நூலகம், அனைத்து அம்சங்களும் உடைய கம்ப்யூட்டர் லேப், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி மாணவர் விடுதி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை, தபால் அலுவலகம், மருத்துவ அதிகாரிகளுடன் கூடிய மருத்துவமையம் என பல எண்ணற்ற வசதிகள் இக்கல்விநிறுவனத்தில் உள்ளன.

பணிவாய்ப்புகள்
இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதத்தில் பல உயர் நிறுவனங்கள் ஆண்டுதோறும் இங்கு வந்து மாணவர்களை தேர்வு செய்து வருகின்றன. டி.ஆர்.டி.ஓ.,, ஐ.பி.எம்.,,மெக்கான், என்.பி.சி.சி.,, யுனிடெக், விப்ரோ, வேதந்தா, பி.சி.பி.,, ஐ.ஓ.சி.எல்., உள்ளிட்ட நிறுவனங்களில் இங்கு படிக்கும் மாணவர்கள் பணியில் அமர்கின்றனர்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us