நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவா.

எழுத்தின் அளவு :

இந்தியாவில் புதிதாக 10 என்.ஐ.டி.க்களைத் துவக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்ததன் அடிப்படையில் கோவாவில் புதிதாக என்.ஐ.டி. துவக்கப்பட்டது.

இந்த கல்வி நிலையம் பொறியியல் கல்லூரியாக துவங்கப்பட்டு பிறகு அதன் வளர்ச்சியால் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் என்.ஐ.டி. அந்தஸ்தை பெற்றது.

இங்கு பி.டெக். பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். குறிப்பாக டாமன் அண்ட் டையூ, தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி, லட்சதீவுகள் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்காகவே கோவாவில் என்.ஐ.டி. துவக்கப்பட்டுள்ளது. என்.ஐ.டி.யில் கோவா மாணவர்களுக்கு 50% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 50% இடங்களில் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

கடந்த 2010-11ஆம் ஆண்டில் இருந்து தான் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. மாணவர்கள் ஏ.ஐ.இ.இ.இ. ரேங்க் பட்டியலின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.

கர்நாடக மாநிலம் சூரத்கல்லில் உள்ள என்.ஐ.டி.யின் மேற்பார்வையில் இந்த புதிய என்.ஐ.டி. செயல்படுகிறது.

தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங், எலக்டிரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் ஆகிய 3 பாடப்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.

ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 30 மாணவர்கள் என மொத்தம் 90 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு 6 இடங்கள் தனியாக ஒதுக்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கோவா,
கோவா காலேஜ் ஆப் என்ஜினியரிங்,
பர்மாகுடி, கோவா - 403 401
தொலைபேசி எண் - (0832) 233 5944, 233 5955

மேலும் விவரங்களுக்கு http://www.nitgoa.ac.in/ இணையதளத்தைப் பார்க்கவும்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us