நேனோ டெக்னாலஜியின் புதிய சகாப்தம்

எழுத்தின் அளவு :

தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் உயிரி தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை கண்டுள்ளது. மருத்துவம், அறிவியல், இயற்பியல் துறைகளில் நேனோ டெக்னாலஜி, புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


நுண்ணிய சிக்கல்களை கொண்டு, மாபெரும் சாதனைகள் புரிய, நேனோ டெக்னாலஜி அறிவியல் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதன் நோயின்றி, வாழ்வதற்கு இப்புதிய அறிவியல் வழிகாட்டியுள்ளது. எல்லை இல்லாத ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நவீன உயிரியல் வழிவகுத்துள்ளது.


அணு ஆராய்ச்சியில் இயற்பியலும் வேதியலும் தங்களுக்கென்று பங்கு வகிக்கின்றன. இதே போன்று உயிரியலில் நேனோ அணுக்களை கோர்வைப்படுத்தும் முயற்சியில் இன்றைய அறிவியல் ஆராய்ச்சி வளர்ச்சி அடைந்துள்ளது. சென்னையில் உள்ள சர்வதேச உயிரி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மரபியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் உள்ளன.



கருவில் வளரும் குழந்தைகளுக்கு இதய குழாய்களில் உள்ள நோய்களையும் நரம்பியல் பாதிப்புகளையும் தடுப்பதற்கு மரபியல் பொருள் ஒன்றை செலுத்துவதற்கான நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் மனிதனை தாக்கும் நோய்களிலிருந்து விடுபட இவ்வகையான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் தர வேண்டும்.


தாவரங்கள் மற்றும் விவசாயம், அறிவியல், மருத்துவம் மற்றும் நோய்கள் தொடர்பான ஆராய்ச்சி உயிரி மூலக்கூறு மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பம் போன்றவற்றிலும் தேசிய அதிநவீன ஆராய்ச்சி மையம் பல பரிந்துரைகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இதுபோன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தேசிய மற்றும் சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டும். பார்க்கின்சான் நோய் சிகிச்சையில் நேனோ டெக்னாலஜி உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.


தேசிய மூளை ஆராய்ச்சி மையம் அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்களை கொண்ட குழுவை அமைத்து அமெரிக்காவிலுள்ள பென் ஸ்டேட் பல்கலைகழகத்துடன் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உலக சந்தையில் இந்தியா 12 சதவீத பருத்தி உற்பத்தி செய்து வருகிறது. எனினும் இந்திய விவசாயிகள் அதிக சாகுபடி செய்ய வில்லை. தாவர மரபணு ஆராய்ச்சியாளர்கள், நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்கக்கூடிய பருத்தி ரகத்தை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியில்
ஈடுபட திட்டம் உள்ளது.


இந்திய விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்ப வல்லுனர்கள், உலக அளவில் வெளியாகும் மீத்தேன் வாயுவை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.  இந்த வாயுவை பயனுள்ளதாக்க ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.


உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...



அணையா தீபம்...
பத்து உறுதி மொழிகள்



1. நான் எனது வாழ்க்கையில் நல்ல லட்சியத்தை மேற்கொள்வேன்.
2.நன்றாக உழைத்துப் படித்து, என் வாழ்க்கையிலே மேற்கொண்ட லட்சியத்தை அடைய முற்படுவேன்.
3. நான் எனது விடுமுறை நாட்களில் எழுதப்படிக்கத் தெரியாத ஐந்து பேருக்காவது எழுத படிக்க சொல்லித் தருவேன்.
4. என் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைந்தபட்சம் ஐந்து செடிகளை நட்டு அதை பாதுகாத்து வளர்த்து மரமாக்குவேன்.
5. மது, சூதாடுதல், மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆளாகி துயர்படும் ஐந்து பேரையாவது மீட்டு நல்வழிப்படுத்த நான் முயற்சிப்பேன்.
6.துயர்படும் ஐந்து பேரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களது துயரை துடைப்பேன்.
7.ஜாதி, மதம், மொழியின் பெயரால் எந்த பாகுபாடும் பாராட்டாமல் எல்லோரிடமும் சமமாக நடந்து கொள்வேன்.
8.நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்த கொண்டு மற்றவர்
களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முயல்வேன்.
9.நான் என் தாய் மற்றும் தாய்நாடு இரண்டையும் நேசித்து பெண்குலத்திற்கு உரிய மரியாதையும் கண்ணியத்தையும் அளிப்பேன்.
10. நான் நாட்டில் அறிவு தீபத்தை ஏற்றி அணையா தீபமாக சுடர் விட செய்வேன்.


மாற்றுவோம்...


கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடைப்பட்ட சமூக பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம். சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்றுவோம்.


விவசாயம், தொழில் மற்றும் சேவை துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்து செல்லும் நாடாக இந்தியாவை மாற்றுவோம். சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் பண்பாடு நிறைந்த தரமான கல்வி கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்றுவோம்.


தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய நாடாக இந்தியாவை மாற்றுவோம்.  ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம். வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை களையப்பட்டு, குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்ட நாடாக இந்தியாவை மாற்றுவோம்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us