மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதில்கள் (7)

எழுத்தின் அளவு :

வளர்ந்து வரும் பயங்கரவாதத்தை நாம் எப்படி கட்டுப்படுத்துவது?
செல்வசிவாகணேஷ், செங்கல்வராயா பாலிடெக்னிக், சென்னை
சன்சித், பிளேட்டோ அகடமி மெட்ரிக் பள்ளி, திருப்பூர்
ராஜயோகன், மகாராஜா பிருத்வி இன்ஜினியரிங் கல்லூரி, அவினாசி
கிரீஷ், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாயா பாலிடெக்னிக், கோவை
அனீஷ், திருநகர், வில்லிவாக்கம், சென்னை
விக்னேஷ், லட்சுமி மில்ஸ் பள்ளி, தூத்துக்குடி
விஷ்ணு, அமெரிக்கன் கல்லூரி, மதுரை


சமுதாய கட்டமைப்பின் நிலையற்ற தன்மையால்தான் பயங்கரவாதம் உருவாகிறது. பல்வேறு நாடுகளில் இப்பயங்கரவாதம் உள்ளது. இளைஞர்களுக்கு நாம் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கும் போது அதை தடுக்கலாம். நிதி வசதியில் உள்ள சமச்சீரற்ற தன்மையை நாம் மாற்றும் போது, சமூகத்தில் உள்ள பல்வேறு வகையான பாகுபாடுகள் களையப்பட்டு பயங்கரவாதத்தை ஒழிக்கலாம். மதம் என்பது ஆன்மிகமாக மாற்றம் அடைய வேண்டும். பசி பட்டினியை ஒழித்து வளர்ந்த நாடாக
நாம் மாற வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் அமைதி தவழும் நாடாக இந்தியா மாறும்.



2020ம் ஆண்டில் இந்தியா அறிவு சார் சூப்பர்பவர் ஆகுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
 மணிகண்டன், வீனஸ் கார்டன், மங்கலம் ரோடு, திருப்பூர்
 நாகேந்திர குமார்,    வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை
 ஈஸ்வரன், ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
 சந்தோஷ், மேரி மாதா மெட்ரிக் பள்ளி, மதுரை
 ஜனனி, ஸ்ரீதாராசந்த் ஜெயின் வித்யாலயா, சென்னை
 சத்யராஜ், கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராமம்
 மோனிஷ்குரு, செயின்ட் மேரி மெட்ரிக் பள்ளி, கோவை
 மணிகண்டன், பி.கே.என்., கல்லூரி, திருமங்கலம்
 சுரேஷ்குமார், தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை
 பிரவீன், சர் எம்.சி.டி.எம், டிரஸ்ட் பள்ளி, கீழ்ப்பாக்கம்
 மாது, ஆர்.எம்.கே., இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை
 குருபரன், ஸ்ரீஆனந்த் ஜோதி வித்யாயலயா, சென்னை
 கார்த்திகேயன், வேல்டெக், ஆவடி, சென்னை



நாம் கல்வியில் அதிக முதலீடு செய்ய வேண்டும். நம் சமுதாயத்துக்கு தரமான கல்வியை அளித்தாலே அறிவுசார் சமுதாயம் உருவாகும். இளைஞர்கள் அனைவரும் கல்லாமையை இல்லாமல் ஆக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கிராமப்புறங்களில் சிறு சிறு தொழில்கள் துவங்க உதவி செய்து அங்குள்ள இளைஞர்களுக்கு பணிவாய்ப்புகளை அளிக்க வேண்டும். இதுவே இந்தியாவை 2020ம் ஆண்டில் அறிவுசார் சூப்பர்பவர் ஆக்க உதவும்.



உலகம் வெப்பமடைந்து வருவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
வெங்கட் சுப்ரமணியன், லட்சுமி மெட்ரிக்பள்ளி, கருப்பாயூரணி, மதுரை
பிரசன்ன குமார், டி.எம்.எச்.என்.யு., பள்ளி தேனி,
சுகன்யா ராஜமன்னார், நடராஜன் நகர், தஞ்சாவூர்


உலகம் வெப்பமடைதல் என்பது கட்டுக்கதை என்று இனி சொல்ல முடியாது. அது உண்மையாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பூமி தற்போது 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துவிட்டது.
உறைபனி மற்றும் பனிக்கட்டிகள் இந்த வெப்ப உயர்வில் மாற்றங்கள் அடையும். பனிக்கட்டிகள் இந்த வெப்பநிலை மாற்றத்தால் உருக தொடங்கியுள்ளன. மலைகளில் உள்ள பனி உருகுவதால் அவை கடல் மட்டத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால் துருவப்பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் கடல்மட்டத்தை உயர்த்தும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறைகள், நம் வாழ்க்கை முறையில் கடைபிடிக்கப்படும் எளிய முறைகள் ஆகியவற்றால் உலகம் வெப்பமடைதலை தடுக்கலாம்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us