மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதில்கள் (20)

எழுத்தின் அளவு :

உங்களைப் போன்று உயர்ந்த பணிகளை மேற்கொள்ள நானும் விரும்புகிறேன். வழி சொல்லுங்களேன்.
- உமர் பரூக், யாதவா கல்லூரி, மதுரை
- சத்யா, பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, வத்தலக்குண்டு
இளைஞர்களாகிய உங்களுக்கு வாழ்வில் லட்சியம் வேண்டும். இலக்கை தீர்மானித்த உடன் அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. சலிக்காத மனம், இடைவிடாத கடின உழைப்பு இருந்தால் தடைகளை தாண்டி இறுதியில் வெற்றி பெறலாம்.


கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
 - ஹேமா, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை.
நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீன் மற்றும் சர் சி.வி.ராமன் போன்றோர் கூட இந்த அண்ட சராசரத்தை படைத்த கடவுளின் விந்தையை கண்டு பிரமித்தனர். ராமன் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். என்னைப் பொறுத்தவரை நமக்கு இறைவன் மீது நம்பிக்கை இருந்தால், நமது முயற்சியின் முடிவு பல மடங்காகப் பெருகும்.


நேனோ டெக்னாலஜியின் எதிர்காலம் என்ன?
- ஜெகநாதன், அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்
- கவிதா, கலைமகள் கல்லூரி, கோவை
- ஷியாம் சுந்தர், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம்
- முருகேசன், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்
மிக நேர்த்தியான தொழில்நுட்பத்தைக் கொண்டது நேனோ டெக்னாலஜி. மருத்துவத்துறையில் இந்த தொழில்நுட்பம் சாமான்யர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. பயோ இன்பர்மாடிக்ஸ் துறையுடன் இந்த துறை எதிர்காலத்தில் சங்கமிக்கும் வாய்ப்புள்ளது. அது மருத்துவத் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us